இந்திய கார்களில் காணப்படும் 10 முக்கிய விஷயங்கள்!

ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபட்ட ரசனை மற்றும் தேவைகள் இருக்கின்றன. அதற்கு தகுந்தவாறே கார் மாடல்களில் மாறுதல்கள் அல்லது வடிவமைப்பு செய்து விற்கப்படுகின்றன. அதேபோன்று, இந்தியாவில் விற்பனையாகும் கார் மாடல்களிலும் சில பொதுவான விஷயங்களை தற்போது காணமுடிகிறது.

இதனால், பல கார் நிறுவனங்கள் இந்தியாவிற்கென பிரத்யேக மாடல்ளை அறிமுகம் செய்கின்றன. இல்லையெனில், சில மாற்றங்களை செய்து இந்திய சந்தைக்கு தகுந்தவாறு மாற்றங்களை செய்து களமிறக்குகின்றன. அந்த வகையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார் மாடல்களில் காணப்படும் சில சுவாரஸ்யமான விஷயங்களை இந்த செய்தித்தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறோம்.


இந்திய கார்களில் காணப்படும் சுவாரஸ்ய விஷயங்கள்

அந்த பத்து விஷயங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

ஆங்கில எழுத்தாக்கம்: சந்தோஷ் ராஜ்குமார்

தமிழாக்கம்: சரவணராஜன்

1.இட நெருக்கடி

1.இட நெருக்கடி

பல்வேறு நாடுகளில் இடவசதியை அடிப்படையாகக் கொண்டு கார்கள் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் வடிவமைக்கப்படும் கார்களில் பெரும்பாலான காம்பேக்ட் கார்கள் மிக நெருக்கடியான இடவசதியை கொண்டுள்ளன. பார்க்கிங் மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில்கொண்டு இந்தியாவிற்காக தயாரிக்கப்படும் புதிய கார் மாடல்கள் மிக நெருக்கடியாக வடிவமைக்கப்படுகின்றன. மேலும், 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட கார்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகளும், காம்பேக்ட் கார்களை தயாரிப்பதற்கு கார் நிறுவனங்களை தூண்டுவதாக அமைகிறது. அமெரிக்காவில் செவர்லே க்ரூஸ் செடான் காரை காம்பேக்ட் செடான் என குறிப்பிடுகின்றனர். ஆனால், நம் நாட்டில் காம்பேக்ட் செடான் கார்களையே ஒரு பிரிமியம் கார் போல பாவிக்கின்றனர்.

 2. சூட்சுமம்

2. சூட்சுமம்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா பிரியோ கார் ஓர் நல்ல மாடல்தான். ஆனால், அதன் டிசைன் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் கவரவில்லை. அந்த பிரியோ காரில் பூட் ரூம் சேர்த்து அமேஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட காம்பேக்ட் செடான் இன்று விற்பனையில் சக்கை போடு போடுகிறது. இதேநிலை, டிசையர் காரின் விற்பனையிலும் எதிரொலிக்கிறது. நடைமுறைக்கு மிக சாத்தியமாக இருப்பதால் காம்பேக்ட் செடான் கார்களுக்கு அதிக மவுசு இருக்கிறது.

 3. ரொம்ப பிரிமியம் மாடல்

3. ரொம்ப பிரிமியம் மாடல்

தற்போது வரும் மாடல்களில் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் சில்வர் அலங்கார வேலைப்பாடுகள் அதிகம் கொடுக்கப்படுகிறது. அதனை இந்திய வாடிக்கையாளர்கள் பிரிமியம் மாடல் தோற்றத்தை தருவதாக கருதுவதால்தான் இவ்வாறு கொடுப்பதாக கார் நிறுவனங்கள் கருத்து கூறுகின்றன.

கொசுத்தொல்லை

கொசுத்தொல்லை

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விற்பனையில் பெரிய சாதனை எண்ணிக்கையை கடந்தாலோ அல்லது குறிப்பிட்ட ஆண்டுகளை வெற்றிகரமாக கடக்கும் மாடல்களுக்கு லிமிடேட் எடிசன் மாடல்கள் வெளியிடப்பட்டன. ஆனால், தற்போது ஒரு சில மாதங்களில் பல லிமிடேட் எடிசன் மாடல்களையும், ஸ்போர்ட் எடிசன் மாடல்களையும் கார் நிறுவனங்கள் அறிமுகம் செய்கின்றன. வெளிப்புறத்தில் கவர்ச்சியாக ஸ்டிக்கரை ஒட்டி பல ஆயிரங்களை கறக்க முயற்சி நடக்கின்றது. ஒரு சில கூடுதல் ஆக்சஸெரீஸ்களை கொடுத்து வாடிக்கையாளர்களை கவர போட்டி நடக்கிறது.

5. ஆறாம்பட்சம்

5. ஆறாம்பட்சம்

நம் நாட்டில் ஓடும் பெரும்பாலான கார்களில் பாதுகாப்பு வசதிகள் என்பது பிரிமியம் அம்சங்களாக இருக்கின்றன. ஏர்பேக் இருக்கிறதோ இல்லையோ, புளூடூத் இருக்கிறதா என்று பார்க்கும் காலமாகிவிட்டது. இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேக வரம்பு அதிகரிக்கப்பட்ட போதிலும், அதற்கு தக்கவாறு கார்களில் பாதுகாப்பு வசதிகள் இருப்பதையும் கட்டாயமாக்க வேண்டும். இதனால், உலகின் மிக மோசமான நெடுஞ்சாலைகளாக நம் நாட்டு நெடுஞ்சாலைகள் மாறிவிட்டன.

6.எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்

6.எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்

எக்ஸ்ட்ரா பம்பர், போல்ட் ஆன் கார்ட்ஸ் என ஏராளமான வெளிப்புற ஆக்சஸெரீஸ்கள் பிற வாகனங்களுக்கும், பாதசாரிகளுக்கும் அச்சுறுத்தலான விஷயமாகிவிட்டது. இதுபோன்று பொருத்தப்பட்ட கார்கள் பிற வாகனங்கள் அல்லது பாதசாரிகள் மீது மோதினால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

7. பீஜ் இன்டிரியர்

7. பீஜ் இன்டிரியர்

அடர் வண்ண இன்டிரியரைவிட பீஜ் போன்ற மென்மையான வண்ண இன்டிரியரை பிரிமியமாக கருதி கொடுக்கின்றனர். ஆனால், இந்த பீஜ் வண்ண இன்டிரியர் மற்றும் அப்ஹோல்ஸ்டரியில் அழுக்கு எளிதாக தெரியும் என்பதும், பராமரிப்பிலும் மிகுந்த சிரமம் இருப்பதையும் பலர் உணர்வதில்லை.

8. குடும்ப கார்கள் ஆதிக்கம்

8. குடும்ப கார்கள் ஆதிக்கம்

குடும்ப உறுப்பினர்களுக்கான மாடல்களாகவே நம்நாட்டிற்கான கார்கள் வடிவமைக்கப்படுகின்றன. இதனால், சிறப்பான பெர்ஃபார்மென்ஸ், கையாளுமை கொண்ட கார்களின் எண்ணிக்கை மிக குறைவு. இதனால், மிகச்சிறந்த ஓட்டுதல் தரம் கொண்ட கார்களை ஓட்டும் வாய்ப்பு பலருக்கு கிடைக்கவில்லை.

 9. சின்ன வீல்கள்

9. சின்ன வீல்கள்

நம் நாட்டு வேகத்தடைகளை காரணம் காட்டி கார்களில் சின்ன சைஸ் வீல்கள் பொருத்தப்படுகின்றன. பல காம்பேக்ட் ரக கார்களில் அதிகபட்சம் 15 இஞ்ச் வீல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை காணலாம்.

10. இதுவும் வேணும்

10. இதுவும் வேணும்

சிறிய காராக இருந்தாலும் கேபின் இடவசதி சிறப்பாக இருக்க வேண்டும் என்று இந்தியர்கள் விரும்புகின்றனர். சில சமயம் வேகன்-ஆர் காரில் பல தலைகள் அடைத்துக் கொண்டு செல்வதை காணலாம். எனவே, அதிக இடவசதியை வழங்குவதில் கார் தயாரிப்பாளர்கள் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். இதுவே தங்களுக்கு சவாலானதாகவும் குறிப்பிடுகின்றனர்.

உங்களது கருத்து

உங்களது கருத்து

உங்களது மேலான கருத்துக்களை கருத்துப் பெட்டியில் பதிவு செய்யலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்கள் இருக்கும் நாட்டில் விற்பனையாகும் கார்களில் காணப்படும் பொதுவான விஷயங்களை இங்கே பகிர்ந்துகொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 10, 2014, 17:31 [IST]
English summary
Our cars have their own personalities too. Personal transport in India is serious business, and now cars are increasingly designed specifically for India, or at least homologated very differently to say, their European counterparts. As a result, certain quirks and traits have crept up in Indian automobiles over the years, and we've picked out ten of those qualities that separate our cars from the rest. Read on, and see if you agree with our observations.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+