70 புதிய கார் மாடல்கள் அறிமுகத்துடன் நிறைவடைந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போ!

டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடந்து வந்த 12வது சர்வதேச வாகனக் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்த வாகனக் கண்காட்சியில் 70 புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில், 26 மாடல்கள் சர்வதேச அளவில் அறிமுகமாகின. இதுதவிர, பல்வேறு புதிய இருசக்கர வாகனங்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

2014 Delhi Auto Expo

மொத்தம் 5.61 லட்சம் பார்வையாளர்கள் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு வருகை புரிந்துள்ளனர். கடைசி நாளான நேற்று மட்டும் 90,000 பார்வையாளர்கள் வருகை தந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டு பிரகதி மைதானத்தில் நடந்த சர்வதேச வாகனக் கண்காட்சியை 7 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்ட நிலையில், இந்த ஆண்டு முதல்முறையாக இடம் மாற்றம் கண்ட வாகனக் கண்காட்சிக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்தது.

இருப்பினும், நெருக்கடி ஏதும் இல்லாமல், பார்வையாளர்கள் மிக சிறப்பாக கண்காட்சியை பார்வையிட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய மாடல்களின் வருகையால், கார் மார்க்கெட்டில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று கார் நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 12, 2014, 12:48 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+