இதுதான் 2014 ஃபியட் புன்ட்டோ ஃபேஸ்லிஃப்ட் கார்- படங்கள்!
விரைவில் விற்பனைக்கு வரும் ஃபியட் புன்ட்டோ ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்கள் ஃபேஸ்புக் மூலம் வெளியாகியுள்ளன. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபியட் அவென்ட்டியூரா காரின் ஸ்டைலை ஒத்திருக்கிறது.
புன்ட்டோ ஃபேஸ்லிஃப்ட் அடிப்படையில் கூடுதல் ஆஃப் ரோடு ஆக்சஸெரீஸ்கள் மற்றும் சில மாற்றங்கள் கொண்ட மாடல்தான் அவென்ட்டியூரா என்பதால் தோற்ற ஒற்றுமை தவிர்க்க முடியாதது. ஆனால், முந்தைய மாடல் கம்பீரத்துக்கு பெயர் போனது. ஆனால், புதிய மாடலை சற்று அழகு பதுமையாக காட்டுவதற்கு முயற்சி செய்துள்ளனர் ஃபியட் நிறுவனத்தின் டிசைன் பிரிவு வல்லுனர்கள்.
படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்
முந்தைய மாடலின் வடிவமைப்பில் சிறிய மாற்றங்களை செய்து அழகை கூட்டியுள்ளனர். ஹெட்லைட், கிரில் மற்றும் அலாய் வீல்கள் புதிது. பின்புறத்திலும் பம்பர், பூட் லிட் மற்றும் டெயில் லைட் ஆகியவை கவர்ச்சியாக மாற்றப்பட்டுள்ளன. இண்டிகேட்டருடன் கூடிய ரியர் வியூ கண்ணாடியும் புதிய ஃபியட் புன்ட்டோவில் குறிப்பிடத்தக்க அம்சம்.

இன்டிரியர்
ஃபியட் லீனியா ஃபேஸ்லிஃப்ட் காரின் இன்டிரியர் அம்சங்களின் பாதிப்பு அதிகமிருக்கிறது. இன்டிரியர் வண்ணக் கலவையும் சிறப்பாக இருக்கிறது.

பெட்ரோல் எஞ்சின்கள்
முந்தைய மாடலில் இருந்த அதே பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களுடன் வருகிறது. 67 பிஎச்பி சக்தியையும், 96 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 89 பிஎச்பி ஆற்றலையும், 115 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் விற்பனைக்கு வருகிறது.

டீசல் மாடல்
டீசல் மாடலில் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் இருவித சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். ஒரு மாடல் 75 பிஎச்பி மற்றும் 197 என்எம் டார்க்கையும் அளிக்கும். மற்றொரு மாடல் 91 பிஎச்பி ஆற்றலையும் 209 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

பழைய மாடலுக்கு தள்ளுபடி
விரைவில் புதிய மாடல் விற்பனைக்கு வருவதால் பழைய ஃபியட் புன்ட்டோ காருக்கு தற்போது அதிகபட்ச சலுகைகள் வழங்கப்படுவதாக டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாத இறுதியில் ஃபியட் புன்ட்டோ ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Photo Credit: Team Fiat Moto Club


Click it and Unblock the Notifications








