ஃபோர்டு இந்தியா இணையதளத்தில் முகம் காட்டிய புதிய ஃபியஸ்ட்டா!

By Saravana

கடந்த மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஃபியஸ்ட்டா கார் ஃபோர்டு இணையதளத்தில் முகம் காட்டியிருக்கிறது. எனவே, விரைவில் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

படங்கள் மட்டுமின்றி, 360 டிகிரி கோணத்தில் புதிய ஃபியஸ்ட்டா காரை பார்க்கும் வாய்ப்பும் அந்த இணைய பக்கத்தில் வழங்கப்பட்டது. மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் கோதாவில் குதிக்க இருக்கும் புதிய ஃபியஸ்ட்டா காரின் படங்கள், கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

அஸ்டன் மார்ட்டின் முகம்

அஸ்டன் மார்ட்டின் முகம்

முகப்பு கிரில் அஸ்டன் மார்ட்டின் கார்களின் டிசைனை ஒத்ததாக இருக்கிறது. மேலும், கிரில்கள் பிளாஸ்டிக்குக்கு பதிலாக குரோம் பட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், காரின் தோற்றம் பிரிமியமாக காட்சி தருகிறது.

பம்பர்

பம்பர்

முன்புறம் மற்றும் பின்புற பம்பர்களின் டிசைன் மாற்றப்பட்டிருக்கிறது. ஹெட்லைட்டுகள், பனி விளக்குகள் அறையின் டிசைனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 பின்புற டிசைன்

பின்புற டிசைன்

பின்புறத்தில் டெயில் லைட்டுகள், பம்பர் டிசைன் மாற்றப்பட்டிருக்கிறது.

 டிஃபியூசர்

டிஃபியூசர்

பம்பருடன் இயைந்திருக்கும் டிஃபியூசரும் காருக்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தை கொடுக்கிறது.

உறுதியான பாடி

உறுதியான பாடி

புதிய ஃபோர்டு ஃபியஸ்ட்டாவின் பாடி போரோன் ஸ்டீல் என்ற கலப்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது சாதாரண ஸ்டீலை விட 4 மடங்கு கூடுதல் உறுதிகொண்டதாக ஃபோர்டு தெரிவிக்கிறது.

அலாய் வீல்

அலாய் வீல்

புதிய டிசைனிலான அலாய் வீல்களும் காருக்கு கூடுதல் மதிப்பை தருகிறது. ஆனால், இது டாப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

சிங்க் தொழில்நுட்பம்

சிங்க் தொழில்நுட்பம்

இந்த காரில் ஃபோர்டு சிங்க் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரேடியோ, அவசர கால உதவி, மொபைல்போன் அழைப்புகளை வாய்மொழி உத்தரவுகள் மூலம் இயக்கும் வசதிகளை தரும்.

 புஷ் பட்டன் ஸ்டார்ட்

புஷ் பட்டன் ஸ்டார்ட்

இந்த காரில் புஷ் பட்டன் ஸ்டார்ட், ரெயின் சென்சிங் வைப்பர்கள், தானியங்கி ஹெட்லைட்டுகள் போன்ற நவீன வசதிகள் உள்ளன. இவை டாப் வேரியண்ட் மாடலில் கிடைக்கும். உட்புறத்தில் டியூவல் டோன் இன்டிரியர் கொண்டதாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய ஃபோர்டு ஃபியஸ்ட்டா காரில் 90 பிஎஸ் பவரை அளிக்கும் 1.5 லிட்டர் டிடிசிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 19, 2014, 12:41 [IST]
English summary
The 2014 Ford Fiesta which the company displayed at the Auto Expo 2014 last month has now appeared in Ford India's official website. The site provides plenty of studio images of the all new Fiesta along with 360 degree view and also shows everything fresh about the vastly updated sedan that we can expect.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+