புதிய ஹோண்டா சிட்டி காருக்கு குறைந்தது 4 மாதங்கள் வெயிட்டிங் பீரியட்!

By Saravana

புதிய ஹோண்டா சிட்டி காருக்கு 4 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட் நீள்கிறது. இன்று காரை முன்பதிவு செய்தால், குறைந்தது 4 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது.

பெட்ரோலில் மட்டுமின்றி, டீசல் மாடலிலும் தற்போது புதிய ஹோண்டா சிட்டி கிடைக்கிறது. இதுவே, புதிய ஹோண்டா சிட்டி காருக்கான காத்திருப்பு காலம் அதிகரித்தற்கு முக்கிய காரணம்.

New Honda City

விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 4 மாதங்களில் மட்டும் 30,959 புதிய ஹோண்டா சிட்டி கார்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், சிட்டி காருக்கு இருக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டு, அமேஸ் கார் உற்பத்தியை குறைக்கவும் ஹோண்டா முடிவு செய்துள்ளது.

ஹோண்டா சிட்டி காரின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் காத்திருப்பு காலத்தை வெகுவாக குறைக்க முடியும் என்பது ஹோண்டாவின் திட்டம். புதிய சிட்டி காருக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று ஹோண்டா எதிர்பார்க்கவில்லை. இதனால், உற்பத்தியை குறைத்து மதிப்பிட்டுவிட்டது.

மேலும், டாப் வேரியண்ட்டுக்கு 20 சதவீதம் முன்பதிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மொத்த கார்களில் தற்போது 50 சதவீதம் டாப் வேரியண்ட் சிட்டி கார்களே முன்பதிவு நடந்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 13, 2014, 8:54 [IST]
English summary
Honda recently launched the latest version of their 2014 Honda City. The Japanese automobile giant now offers the vehicle in a diesel variant too. This has catapulted the sales as well as bookings of the latest model.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+