சுதந்திர தினத்தன்று விற்பனைக்கு வருகிறது புதிய ஹூண்டாய் ஐ20 கார்!

By Saravana

அடுத்த மாதம் 15ந் தேதி புதிய ஹூண்டாய் ஐ20 கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஹூண்டாய் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபி என்ற குறியீட்டுப் பெயரில் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய ஹூண்டாய் ஐ20 கார் சில மாதங்களாக சென்னையில் வைத்து சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், பண்டிகை காலத்தையொட்டி இந்த புதிய காரை ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

2014 Hyundai i20 Car

புதிய ஹெட்லைட்டுகள், புதிய டிசைனிலான கிரில், ஸ்பாய்லருடன் கூடிய பின்புற கதவு இப்படி பல கவர்ச்சியான டிசைன் அம்சங்களுடன் வருகிறது. புஷ் பட்டன் ஸ்டார்ட், ரிவர்ஸ் கேமரா, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் வைப்பர் போன்ற பல புதிய வசதிகளும் இருக்கும்.

83 பிஎஸ் பவரையும், 114 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் மற்றும் 90 பிஎஸ் பவரையும், 220 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும். டீசல் மாடலின் டாப் வேரியண்ட் ரூ.9 லட்சத்திற்கும் மேலான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் ஐ20 கார்களின் இருப்பு தமிழகத்தில் குறைவாகவே உள்ளன. மொத்தம் 21 கார்கள் மட்டுமே டீலர்களில் உள்ளதாம். டீசல் மாடலில் ஒரே ஒரு அஸ்டா டாப் வேரியண்ட் காரும், பெட்ரோல் மாடலில் மூன்று அஸ்டா டாப் வேரியண்ட் கார்களும் மீதமிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, July 26, 2014, 18:13 [IST]
English summary
According to reports, South Korean Auto maker Hyundai motors to launch Next gen i20 in Indian maket on 15th of August.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+