இன்னும் அழகான வெர்னா... பேஸ்லிஃப்ட் மாடலாக வருகிறது!
ரஷ்யாவில் ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அங்கு சோலரிஸ் என்ற பெயரில் விற்பனையாகும் வெர்னா காரின் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் இந்தியாவிற்கும் வர இருக்கிறது.
வடிவமைப்பில் இன்னும் அசத்தலாக மாறியிருக்கும் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியா வரும்போது புதிய ஹோண்டா சிட்டிக்கு இன்னும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டிசைன்
ஹூண்டாயின் புதிய புளூயிடிக் 2.0 வெர்ஷன் டிசைன் தாத்பரியத்திற்கு வெர்னா மாற்றப்பட்டுள்ளது. புதிய ஜெனிஸிஸ் மற்றும் புதிய சொனாட்டா கார்களைத் தொடர்ந்து வெர்னாவும் புளூயிடிக் 2.0 வெர்ஷன் டிசைன் தாத்பரியத்திற்கு மாறியுள்ளது.

வெளிப்புற மாற்றங்கள்
புதிய ஹெட்லைட், பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன் கூடிய பனி விளக்குகள், புதிய பம்பர் மற்றும் கிரில் என முன்புறம் வழக்கம்போல் புளுயிடிக் டிசைனில் செதுக்கப்பட்டு கவர்கிறது.

பின்புறம்
எல்இடி விளக்குகளுடன் பிரேக் லைட்டுகள், புதிய ரிஃப்லெக்டர், தாழ்வான பம்பர் ஆகியவை வெர்னாவின் பின்புறத்தை மிக அழகாக காட்டுகிறது.

இன்டிரியர்
இன்டிரியரில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. பழைய மாடலில் இருந்த அதே இன்டிரியருடன் வந்துள்ளது.

எஞ்சின்
ஹூண்டாய் சோலரிஸ் கார் 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களில் அங்கு விற்பனைக்கு கிடைக்கும். இந்தியாவில் டீசல் மாடலிலும் வரும்.

விலை
ரஷ்யாவில் 4,73,900 ரூபிள் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் மாற்றும்போது ரூ.8 லட்சத்தையொட்டி விலையில் வந்துள்ளது. இதே ஆரம்ப விலையில்தான் தற்போது இந்தியாவில் ஹூண்டாய் வெர்னா விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவுக்கு...
இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய வெர்னா கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால் ஹூண்டாய் சிட்டியிடம் விட்ட இடத்தை திரும்ப பெற முயற்சிக்கும்.


Click it and Unblock the Notifications








