சோதனையின்போது எமது கேமராவில் சிக்கிய 2014 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

By Saravana

எஸ்யூவி மார்க்கெட்டில் தனி இடத்தை தக்க வைத்து வரும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. வெளிப்புறம், உட்புறத்தில் மாற்றங்களுடன் கூடுதல் வசதிகள் கொண்டதாக வருகிறது ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட்.

தற்போது இறுதிக்கட்ட சாலை சோதனைகள் செய்யப்பட்டு வரும் இந்த புதிய ஸ்கார்ப்பியோ மாடலை எமது செய்தியாளர் அஜிங்கியா படம் பிடித்துள்ளார். சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட ஸ்பை ஷாட் படங்கள் மற்றும் புதிய ஸ்கார்ப்பியோ மாடலின் முக்கிய தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.


கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

முக்காடு போட்டு சோதனை செய்யப்பட்ட ஸ்கார்ப்பியோவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் குறித்த கூடுதல் தகவல்கள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில் பார்க்கலாம்.

 முகப்பு

முகப்பு

முந்தைய மாடலில் இருந்த முகப்பு கிரில்லை கழற்றிவிட்டு புதிய கிரில்லை பொருத்தியுள்ளனர். புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய மாடலைவிட முகப்பை கூடுதல் கம்பீரத்துடன் செதுக்கியுள்ளனர். புதிய அலாய் வீல் செட்டும் கொடுக்கப்பட்டிருக்கும்.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

பின்புற டிசைன் மிக கவர்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது. டெயில் லைட்டுகள், டி வடிவிலான பிரேக் இண்டிகேட்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரியர் ஸ்பாய்லர், புதிய பம்பர் டிசைன் போன்றவை ஸ்கார்ப்பியோவின் பின்புறத்தை இன்னும் கவர்ச்சியாக காட்டுகிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியர் டிசைனிலும் அதிக மாற்றங்கள் இருக்கும். நவீன தொழில்நுட்ப வசதிகளை அதிகம் எதிர்பார்க்கலாம். டேஷ்போர்டு டிசைனும் மாற்றம் செய்யப்பட்டிருக்கும். கவர்ச்சியான ஏர்வென்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

கூடுதல் அம்சங்கள்

கூடுதல் அம்சங்கள்

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கும். ரியர் பார்க்கிங் சென்சார், தரமான பிளாஸ்டிக் ஃபினிஷிங் போன்றவையும் புதிய ஸ்கார்ப்பியோவின் ஹைலைட் அம்சங்களாக இருக்கும்.

விற்பனைக்கு எப்போது?

விற்பனைக்கு எப்போது?

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மாடல் எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்பது குறித்த தகவல் இல்லை. ஆனால், விரைவிலேயே இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, August 8, 2014, 10:50 [IST]
English summary
Mahindra India has been caught testing the new version of the Scorpio. Here are a few images we took while driving around. We caught the upcoming SUV in camouflage.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+