பெங்களூரில் விற்பனைக்கு வந்தது புதிய ஸ்கார்ப்பியோ- விபரம்
மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெங்களூரில் நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
டிசைனிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த புதிய ஸ்கார்ப்பியோ 2 வித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

75 பிஎஸ் பவரை அளிக்கும் 2.5 லிட்டர் எம்2டிஐசிஆர் டீசல் எஞ்சின் மற்றும் 120 பிஎஸ் பவரை அளிக்கும் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சினுடன் வந்துள்ளது.
டியூவல் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள், புதிய 17 இஞ்ச் வீல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. புதிய ஸ்கார்ப்பியோ 6 இஞ்ச் திரையுடன், ஜிபிஎஸ் நேவிகேஷன் மற்றும் இதர வசதிகளை வழங்கும் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல், புதிய சென்டர் கன்சோல் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.
மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பம், ரெயின் சென்சிங் வைப்பர்கள், வாய்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரிவர்ஸ் அசிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், ஹைட்ராலிக் பானட் ஓபன் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
டியூவல் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கிரம்பிள் ஸோன், எஞ்சின் இம்மொபைலைசர், எமர்ஜென்சி பிரேக்கிங், 140 கிமீ வேகத்தை கடந்தால், வேக எச்சரிக்கை உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் பெங்களூர் விலை விபரங்களை கீழே காணலாம்.



Click it and Unblock the Notifications








