மும்பையை கலக்கப் போகும் சூப்பர் கார் 'கும்பல்'!
மும்பையில் வரும் 12ந் தேதி பார்க்ஸ் சூப்பர் கார்களின் அணிவகுப்பு திருவிழா நடக்கிறது. 2009ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த பார்க்ஸ் சூப்பர் கார் அணிவகுப்பு திருவிழாவில் நூற்றுக்கணக்கான சூப்பர் கார்கள் பங்கேற்பதுடன், பார்வைக்கு நிறுத்தப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டு திருவிழா வரும் 12ந் தேதி நரிமண் பாயின்ட் விதான் பவன் பார்க்கிங்கில் காலை 8 மணி முதல் 2 மணி வரை கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும், நரிமண் பாயிண்ட் பகுதியிலிருந்து அன்று காலை 10 மணியளவில் சூப்பர் கார்கள் அணிவகுப்பு துவங்கும். மும்பையின் முக்கிய சாலைகள் வழியாக நூற்றுக்கணக்கான சூப்பர் கார்கள் அணிவகுத்து செல்ல உள்ளன. இந்த கண்கொள்ளா காட்சியை காண்பதற்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் கார் பிரியர்கள் மும்பையை முற்றுகையிட உள்ளனர்.

ஹாட் ராட் கார்
அமெரிக்காவின் பிரபலமான 'ஹாட் ராட்' கார் முதல்முறையாக இந்த அணிவகுப்பில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடி, பென்ஸ், லம்போர்கினி, அஸ்டன் மார்ட்டின், போர்ஷே, பென்ட்லீ, ரோல்ஸ்ராய்ஸ் என சொகுசு மற்றும் ஆடம்பர வகை கார்கள் ஒரே இடத்தில் கூடி பார்வையாளர்களை பரவசப்படுத்த உள்ளன.

கண்களுக்கு விருந்து
சூப்பர் கார் கிளப் ஸ்தாபிதரும், ரேமண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான கவுதம் சிங்கானியா கூறுகையில்," உலகின் மிக பிரபலமான சூப்பர் கார்கள் இந்த ஆண்டு கண்காட்சியிலும், அணி வகுப்பிலும் பங்கேற்க உள்ளன. இது மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயம். குறிப்பாக, அமெரிக்கன் ஹாட் ராடு கார் இந்தியாவில் காண்பது அரிதானது. இது கார் பிரியர்களுக்கு நிச்சயம் சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் இல்லை
இந்த சூப்பர் கார் கண்காட்சிக்கு நுழைவு கட்டணம் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓம்கார் ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்த ஆண்டு பார்க்ஸ் சூப்பர் கார் ஷோவை இணைந்து வழங்குகிறது. பார்க்ஸ் சூப்பர் கார் ஷோ கிளப்பில் இணைந்திருக்கும் உயர்ரக கார் உரிமையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

வழித்தடம் விபரம்
நூற்றுக்கணக்கான சூப்பர் கார்கள் அணிவகுத்து செல்ல உள்ள வழித்தடம் விபரம் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








