மேம்படுத்தப்ட்ட அம்சங்களுடன் புதிய ரெனோ ஃப்ளூயன்ஸ் அறிமுகம்
டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் அறிமுகம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட ரெனோ ஃப்ளூயன்ஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விலை கூட முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது. இன்று முறைப்படி விற்பனைக்கு விடப்படுவதாக ரெனோ தெரிவித்துள்ளது.
தோற்றத்தில் சிறிய மாறுதல்களை தந்து ஃப்ளூயன்ஸ் காருக்கு புதுப்பொலிவு கொடுத்துள்ளது ரெனோ. பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் டிசைன் மாற்றங்களுடன் வந்திருக்கும் புதிய ரெனோ ஃப்ளூயன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை பற்றிய தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய டிசைன் அம்சங்கள்
புதிய கிரில் அமைப்பு, புரொஜெக்டர் ஹெட்லைட், பம்பர் ஆகியவை முந்தைய மாடலைவிட முகப்புக்கு கூடுதல் கம்பீரத்தை கொடுத்திருக்கிறது.

பகல்நேர ரன்னிங் விளக்குகள்
புதிய டிசைன் கொண்ட பனி விளக்குகள் அறைக்குள் தற்போது பகல்நேர ரன்னிங் விளக்குகளும் இடம்பெற்றிருக்கிறது. பெரிய ஏர்டேம் அழகாக தெரிகிறது.

அலாய் வீல்கள்
16 இஞ்ச் அலாய் வீல்கள் புதிய டிசைனுடன் காருக்கு கூடுதல் அழகை தருகிறது.

இன்டிரியர்
8 ஸ்பீக்கர்கள் கொண்ட 3டி சர்ரவுண்ட் ஆடியோ சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ட்யூவல் ஸோன் ஏசி, உயர்தர லெதர் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை காருக்கு பிரிமியம் அந்தஸ்த்தை வழங்குகிறது.

இதர வசதிகள்
ரிமோட் சென்ட்ரல் லாக், ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம், முன்புறம் மற்றும் பின்புறத்திற்கான பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் போன்ற வசதிகள் உள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்
ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட், அண்டர்ஸ்டீயரிங் கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற ஏராளமான நவீன பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

எஞ்சின்
முந்தைய மாடலில் இருந்த 110 பிஎஸ் பவரையும், 240 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலில் கிடைக்கும். அராய் சான்றுபடி, லிட்டருக்கு 20.4 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

விலை
இ2 மற்றும் இ4 ஆகிய இரு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இ2 வேரியண்ட் ரூ.13.99 லட்சம் விலையிலும், இ4 வேரியண்ட் ரூ.15.49 லட்சம் விலையிலும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








