மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் டாடா ஆரியாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!
மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட புதிய மாடல் டாடா ஆரியா கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பழைய மாடலில் சிறிய வித்தியாசங்களை செய்து பேஸ்லிஃப்ட் மாடலாக வந்துள்ளது. வெளிப்புறத்தில் பாடி டீகெல்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

மாற்றம்
டபுள் பேரல் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகளுடன் வந்துள்ளது. 16 இஞ்ச் அலாய் வீல்கள் காருக்கு அழகு சேர்க்கிறது. இதுவும் போதாவிடில், 17 இஞ்ச் அலாய் வீல்கள் ஆப்ஷனலாக வாங்கிக்கொள்ளலாம்.

வசதிகள்
4 ஸ்பீக்கர்கள், சப் ஊஃபர் கொண்ட ஹார்மன் சவுண்ட் சிஸ்டம், நேவிகேஷன் சிஸ்டம், லெதர் இருக்கைகள், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், கூல்டு கிளவ் பாக்ஸ், கப் ஹோல்டர்கள் என ஏராளமான வசதிகள் உள்ளன.

பாதுகாப்பு வசதிகள்
6 ஏர்பேக்குகள், டிராக்ஷன் கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் போன்ற போதுமான அம்சங்களை கொண்டிருக்கிறது.

எஞ்சின்
இந்த காரில் 2.2 லிட்டர் வேரிகோர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 150 எச்பபி ஆற்றலையும், 320 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

வாரண்டி
லிட்டருக்கு 15.05 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்று கூறுகிறது. 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர் தூரத்துக்கான வாரண்டியும், எஞ்சினுக்கு தனியாக 3 ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கிலோமீட்டர் தூரத்துக்கான வாரண்டியும் கொடுக்கப்படுகிறது.

விலை விபரம்
வேரியண்ட் வாரியாக விலை விபரம்
Pure LX - INR 9.95 lakh
Pleasure INR 12.00 lakh and
Pride 4X4 INR 14.74 lakh


Click it and Unblock the Notifications








