மே மாதம் விற்பனைக்கு வரும் புதிய டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் கார்!
வரும் மே மாதத்தில் புதிய டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடான் கார் விற்பனைக்கு வர இருக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட தோற்றத்தில் படு கவர்ச்சியாக மாறியிருக்கிறது புதிய கரொல்லா ஆல்டிஸ் கார்.,
தோற்றத்தில் மட்டுமின்றி பல கூடுதல் வசதிகளுடன் புதிய கரொல்லா ஆல்டிஸ் வருகிறது. 7 இஞ்ச் எல்சிடி டச்ஸ்கிரீன், சாட் நவ் நேவிகேஷன், ரிவர்ஸ் பார்க்கிங், லெதர் இருக்கைகள், கீலெஸ் என்ட்ரி, ரெயின் சென்சிங் வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டில் பேடில் ஷிஃப்ட் மூலம் கியர் மாற்றும் வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட வசதிகள் இருக்கும்.

தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட புதிய மாடல் 100மிமீ கூடுதல் நீளம் கொண்டது. இதனால், பின் இருக்கையில் லெக்ரூம் கூடியிருக்கிறது. புதிய கரொல்லாவில் 140 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.
மே மாதம் 27ந் தேதி புதிய கரொல்லா ஆல்டிஸ் கார் விற்பனைக்கு வர இருக்கிறது. ரூ.50,000 முன்பணத்துடன் புதிய டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் காருக்கு முன்பதிவு நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








