இன்னும் சில நாட்களில் புதிய தலைமுறை டொயோட்டா கரொல்லா!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை டொயோட்டா கரொல்லா பிரிமியம் செடான் கார் இன்னும் சில நாட்களில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
புதிய கரொல்லா கார் மீது டொயோட்டா அதிக நம்பிக்கை வைத்துள்ளது. டிசைனிலும், வசதிகளிலும் பல படிகள் முன்னேற்றம் கண்டிருக்கும் புதிய கரொல்லா பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும் என டொயோட்டா உறுதிப்படுத்திவிட்டது.

வேரியண்ட்டுகள்
பெட்ரோல் மாடலில் 5 வேரியண்ட்டுகளிலும், டீசல் மாடலில் 4 வேரியண்ட்டுகளிலும் புதிய கரொல்லா கிடைக்கும். இதுதவிர, பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடலும் உண்டு.

எஞ்சின்
முந்தைய தலைமுறை மாடல்களில் இருந்த அதே எஞ்சின்கள்தான் புதிய கரொல்லாவிலும் வர இருக்கிறது. அதிகபட்சம் 140 பிஎஸ் பவரையும், 173 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. இது 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது சிவிடி டிரான்ஸ்மிஷன் மாடல்களில் கிடைக்கும். டீசல் மாடலில் 88.4 பிஎஸ் பவரையும், 205 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கும். டீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலில் வருகிறது.

அம்சங்கள்
7 இஞ்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, லெதர் இன்டிரியர், க்ரூஸ் கன்ட்ரோல், நேவிகேஷன் ஆகிய வசதிகள் ஆட்டோமேட்டிக் மாடலில் மட்டுமே கிடைக்கும்.

பாதுகாப்பு வசதிகள்
இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்ஸ், ஆட்டோ வைப்பர்கள், கீ லெஸ் என்ட்ரி, பனி விளக்குகள், எல்இடி ஹெட்லைட்டுகள், எஞ்சின் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதிகளுடன் வருகிறது. தற்போதைய மாடலைவிட சிறிது கூடுதல் விலையில் புதிய டொயோட்டா கரொல்லா வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








