2014 மாடல் டொயோட்டா எட்டியோஸ் மற்றும் லிவா கார்கள் அறிமுகம்
2014 மாடல் டொயோட்டா எட்டியோஸ் மற்றும் லிவா கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த வாரம் விடி மற்றும் விடி எஸ்பி ஆகிய 2 புதிய டாப் வேரியண்ட்டுகளில் லிவா டீசல் கார் வந்தது பற்றி தெரிவித்திருந்தோம். இந்த நிலையில், சில மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்ட எட்டியோஸ் மற்றும் லிவா கார்களை டொயோட்டா அறிமுகம் செய்துள்ளது.

லிவா காரின் மிட் வேரியண்ட்டுகள் தற்போது டியூவல் டோன் இன்டிரியர் மற்றும் சாஃப்ட் ஃபேப்ரிக் இருக்கைகளுடன் கிடைக்கிறது. 2014 மாடல் எட்டியோஸ் செடான் கார் ரூ.5.53 லட்சம் ஆரம்ப விலையிலிருந்தும், லிவா கார் ரூ.4.53 லட்சம் ஆரம்ப விலையிலிருந்தும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை பிரிவின் மூத்த அதிகாரி என்.ராஜா கூறுகையில்," வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பல கூடுதல் வசதிகளை இந்த கார்களில் சேர்த்து வருகிறோம். இது புதிய மாடல்கள் நிச்சயம் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications








