ஆடி பிரியர்களுக்கு ஓர் குட் நியூஸ்... கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய ஏ3 கார்!

By Saravana

இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வர இருக்கும் ஆடி ஏ3 செடான் கார் கிராஷ் டெஸ்ட்டில் அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்தை பெற்று, மிக பாதுகாப்பான கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.

ஆடியின் குறைவான விலை செடான் கார் என்ற பெருமையுடன் வரும் இந்த காருக்கு கிராஷ் டெஸ்ட்டில் மிக சிறப்பான புள்ளிகளை பெற்றிருப்பது ஆடி நிறுவனத்தின் வர்த்தகத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்த கிராஷ் டெஸ்ட் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அதிகபட்ச தர அந்தஸ்து

அதிகபட்ச தர அந்தஸ்து

அமெரிக்க நெடுஞ்சாலை காப்பீட்டு கழக அமைப்பு(IIHS) நடத்திய இந்த கிராஷ் டெஸ்ட்டில் டாப் சேஃப்டி பிக்+ என்ற அதிகபட்ச மதிப்பீட்டை பெற்றிருக்கிறது. மொத்தம் 5 விதமான கிராஷ் டெஸ்ட் சோதனைகளுக்கு இந்த புதிய கார் உட்படுத்தப்பட்டது.

5 கோணங்களில் சோதனை

5 கோணங்களில் சோதனை

முன்புறம், கூரையின் வலிமை, பயணிகளுக்கான பாதிப்பு, பக்கவாட்டில் காருக்கு ஏற்படும் பாதிப்பு போன்றவை குறித்து பல்வேறு கோணங்களில் மோதச் செய்து காரின் பாதுகாப்பு அம்சங்கள் மதிப்பிடப்பட்டன.

நன்று மதிப்பீடு

நன்று மதிப்பீடு

அனைத்து பிரிவுகளிலும் நன்று என்ற மதிப்பீட்டை இந்த கார் பெற்றிருக்கிறது. காரில் பொருத்தப்பட்டிருந்த டம்மி எனப்படும் மனித பொம்மைகளின் கால்கள் மற்றும் தலையில் ஏற்படும் காயங்கள் மிக குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்பேக் செயல்பாடு

ஏர்பேக் செயல்பாடு

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் காற்றுப் பைகளின் செயல்பாடும் மிகவும் திருப்திகரமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

ஆடி ஏ3 சொகுசு செடான் காரின் கிராஷ் டெஸ்ட் வீடியோ.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 2, 2014, 11:04 [IST]
English summary
Good news for Audi and people in India who are planning on buying the Audi A3 sedan that's set to launch in our country sometime this year. The 2015 Audi A3 mid-sized luxury sedan has passed the U.S. Insurance Institute of Highway Safety (IIHS) crash test with flying colours.
மேலும்... #audi #a3 #four wheeler #ஆடி #ஏ3
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+