ஆடி க்யூ3 ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்: அடுத்த ஆண்டு இந்தியா வருகிறது!
மேம்படுத்தப்பட்ட டிசைன் மற்றும் எஞ்சினுடன் கூடிய ஆடி க்யூ- 3 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆடி நிறுவனத்தின் ஆரம்ப விலை கொண்ட எஸ்யூவி மாடலான க்யூ-3 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அடுத்த ஆண்டு இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

வெளிப்புற டிசைன்
ஹெட்லைட்டுகள், அலாய் வீல்கள் டிசைன் மாற்றப்பட்டிருக்கிறது. அனைத்து வேரியண்ட்டுகளும் முழு பாடி கலர் பெயிண்ட் கொண்டதாக இருக்கும். ஆடி க்யூ-3 எஸ்இ வேரியண்ட்டின் ஹெட்லைட் ஸினான் பல்புகள் மற்றும் பகல்நேரத்துக்கான ரன்னிங் விளக்குகள் கொண்டதாக வருகிறது. பின்புற டெயில்லைட்டுகளில் எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், இரண்டு டாப் வேரியண்ட்டில் மட்டுமே ஸ்க்ரோலிங் வசதி கொண்டதாக இருக்கும்.

இன்டிரியர்
புதிய ஸ்டீயரிங் வீல், இருக்கைகள் கொண்டதாக வருகிறது. பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன் வசதி, லேன் அசிஸ்ட், சாலை சமிக்ஞைகள் குறித்து எச்சரிக்கும் வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஆடி டிரைவ் செலக்ட் சிஸ்டம் நிரந்தர தொழில்நுட்ப வசதியாக இருக்கும்.

எஞ்சின்
யூரோ- 6 மாசுக்கட்டுப்பாட்டு அம்சங்களுடன் இணையானதாக எஞ்சின்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆடி க்யூ-3 ஃபேஸ்லிஃப்ட் மாடல் 3 பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்தியாவில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.

எப்போது அறிமுகம்?
அடுத்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. 25,340 பவுண்ட் ஆரம்ப விலை முதல் இந்த எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. ஆடி க்யூ3- எஸ்யூவி போன்றே, ஆடி ஏ6 மாடல்களும் அடுத்த ஆண்டு புதுப்பொலிவு பெற இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








