புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்6 கார் அறிமுகம்: முழு விபரம்!
பல்வேறு வகையில் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்6 கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்5 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிசைன் அம்சங்கள் பலவற்றை இந்த புதிய எக்ஸ்6 கார் பெற்றுள்ளது.
ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி கூபே(SAC) என்ற பிரத்யேக பாடி ஸ்டைல் கொண்டது. அதாவது கிராஸ்ஓவரையும், கூபே டிசைன் பாடி ஸ்டைலையும் இணைத்து உருவாக்கப்பட்டது. தோற்றத்தில் வித்தியாசமாகவும், அனைவரையும் திரும்பி பார்க்க வகையிலும் இருக்கும் இந்த புதிய கார் சர்வதேச மார்க்கெட்டில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

வடிவமைப்பு
முந்தைய தலைமுறை எக்ஸ்6 காரை விட புதிய மாடல் நீளத்தில் 32 மிமீ, உயரத்தில் 33 மிமீ மற்றும் அகலத்தில் 6 மிமீ., கூடியிருக்கிறது. இதனால், கேபினுக்கள் இடவசதி அதிகரித்துள்ளது. இது 2,933 மிமீ வீல் பேஸ் கொண்ட கார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஞ்சின் சாய்ஸ்
மூன்றுவிதமான எஞ்சின் மாடல்களில் சர்வதேச மார்க்கெட்டில் விற்பனைக்கு வருகிறது. 450 பிஎஸ் பவரையும், 650 என்எம் டார்க்கையும் அளிக்கும் 4.4 லிட்டர் வி8 ட்வின் டர்போ எஞ்சின் கொண்ட பெட்ரோல் மாடலில் கிடைக்கும். இதுதவிர, இருவித டீசல் மாடலில் வருகிறது. முதலாவது டீசல் மாடலில் 258 பிஎஸ் பவரையும், 560 என்எம் டார்க்கையும் அளிக்கும் 3.0 லிட்டர் ட்வின் டர்போ எஞ்சின் கொண்டது. இரண்டாவது டீசல் மாடலில் 381 பிஎஸ் பவரையு்ம், 740 என்எம் டார்க்கையும் வழங்கும் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் ட்ரை டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

பெர்ஃபார்மென்ஸ்
4.4 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட பெட்ரோல் மாடல் 0- 100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் எட்டிவிடும். இது அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. 3.0 லிட்டர் டீசல் மாடலில் ட்வின் டர்போ கொண்ட மாடல் 0-100 கிமீ வேகத்தை 6.7 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 230 கிமீ வேகம் வரை செல்லும். ட்ரை டர்போ கொண்ட 3.0 லிட்டர் மாடல் 0- 100 கிமீ வேகத்தை எட்டிப்பிடிகக்க 5.2 வினாடிகளை எடுத்துக் கொள்ளும். இது மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும்.

இந்தியாவுக்கு...?
இந்த புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்6 காரின் விலை மற்றும் இதர தகவல்களை இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், விரைவில் சர்வதேச அளவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








