முதலில் இந்தியர்களுக்கு தரிசனம் தரப்போகும் புதிய ஃபோர்டு எண்டெவர்
அடுத்த மாதம் 3ந் தேதி புதிய ஃபோர்டு எண்டெவரின் தகவல்கள், படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இருக்கின்றன.
இதைத்தொடர்ந்து, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதல்முறையாக புதிய ஃபோர்டு எண்டெவர் பொது பார்வைக்கு வர இருக்கிறது.

போர்டு ரேஞ்சர் அடிப்படை டிசைனுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிய எண்டெவர் புதிய 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கும்.
டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு நேருக்கு நேர் மோத வருகிறது புதிய எண்டெவர். லேண்ட்ரோவர் ஆடம்பர எஸ்யூவிகளில் இருப்பது போன்ற டெர்ரெய்ன் செலக்டார் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கும்.


Click it and Unblock the Notifications








