புதுப்பொலிவுடன் வரும் ஹூண்டாய் சொனாட்டா கார்!
2015 மாடலாக வரும் மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் சொனாட்டா காரின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சமீபத்தில் நடந்த ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹூண்டாய் ஜெனிசிஸ் காரின் டிசைன் தாத்பரியங்கள் மற்றும் இன்டிரியர் அம்சங்கள் புதிய சொனாட்டா காரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஹூண்டாய் வெலாஸ்ட்டர் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின்தான் புதிய சொனாட்டா காரிலும் பொருத்தப்பட்டிருக்கும். உதிரிபாகங்கள் மிக சிறந்த தரத்திலானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஏப்ரல் மாதம் நியூயார்க் ஆட்டோ ஷோவில் இந்த புதிய ஹூண்டாய் சொனாட்டா கார் காட்சிக்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








