இன்னும் சில மாதங்களில்... ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்!
புதிய ஹோண்டா சிட்டி வருகையால் மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் முதலிடத்திலிருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டது ஹூண்டாய் வெர்னா. அத்துடன் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய மாருதி சியாஸ் காருக்கான முன்பதிவும் ஹூண்டாய் வெர்னா காருக்கு பெரும் நெருக்கடியை தந்திருக்கிறது.
இந்த நெருக்கடிகளை போக்கிக்கொள்ளும் விதமாக கூடுதல் சிறப்பம்சங்கள், சிறிய டிசைன் மாற்றங்களுடன் புதிய வெர்னா மாடலை ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. ரஷ்யாவில் சோலரிஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் இந்தியாவில் தடம் பதிக்க உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் வைத்து வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சாலை சோதனைகள் நடந்து வருகின்றன. எனவே, அடுத்த சில மாதங்களில் புதுப்பொலிவுடன் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசைன் மாற்றம்
ஹூண்டாயின் புதிய புளூயிடிக் 2.0 வெர்ஷன் டிசைன் தாத்பரியத்திற்கு தகுந்தவாறு முன்பக்கத்தில் சில மாற்றங்களை கண்டிருக்கிறது வெர்னா ஃபேஸ்லிஃப்ட். புதிய ஜெனிஸிஸ் மற்றும் புதிய சொனாட்டா கார்களைத் தொடர்ந்து வெர்னாவும் புளூயிடிக் 2.0 வெர்ஷன் டிசைன் தாத்பரியத்திற்கு மாறியுள்ளது. எனவே, அந்த கார்களின் டிசைன் தாக்கங்கள் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் பிரதிபலிக்கிறது.

வெளிப்புற அம்சங்கள்
புதிய ஹெட்லைட், பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன் கூடிய பனி விளக்குகள், புதிய பம்பர் மற்றும் கிரில் என முன்புறம் வழக்கம்போல் புளுயிடிக் டிசைனில் செதுக்கப்பட்டு கவர்கிறது. சஸ்பென்ஷனும் மேம்படுத்தப்பட்டிருப்பதால் இன்னும் சிறப்பான கையாளுமையை வழங்கும்.

பின்புறம்
எல்இடி விளக்குகளுடன் பிரேக் லைட்டுகள், புதிய ரிஃப்லெக்டர், தாழ்வான பம்பர் ஆகியவை வெர்னாவின் பின்புறத்தை மிக அழகாக காட்டுகிறது.

இன்டிரியர்
ரஷ்யாவில் கருப்பு நிற இன்டிரியருடன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்தியாவில் பீஜ் நிற இன்டிரியருடன் வரும். ஏற்கனவே நிரம்பி வழியும் வசதிகளுடன் கிடைக்கும் வெர்னாவில் போட்டியாளர்களை எதிர்கொள்ளும் விதமாக பல கூடுதல் வசதிகளை சேர்த்து விற்பனைக்கு கொண்டு வரவும் ஹூண்டாய் திட்டமிட்டிருக்கிறது.

எஞ்சின்
ஹூண்டாய் சோலரிஸ் கார் 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களில் அங்கு விற்பனைக்கு கிடைக்கும். ஆனால், இந்தியாவில் தற்போது உள்ள மாடலில் இருக்கும் அதே டீசல் எஞ்சின் கொண்ட மாடலிலும் வரும்.

இந்தியாவுக்கு...
அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய வெர்னா கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால் ஹூண்டாய் சிட்டியிடம் விட்ட இடத்தை திரும்ப பெற முயற்சிக்கும். புதிய மாருதி சியாஸ் காரையும் ஒரு கை பார்க்க முற்படும்.


Click it and Unblock the Notifications








