புதிய லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர் எஸ்யூவி அறிமுகம்!
புதிய லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுல்ளது. புதிய மாடலில் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் வந்துள்ளது.
புதிய முகப்பு கிரில், 17 இஞ்ச் அலாய் வீல்கள், லெதர் இருக்கைகள், சாட் நவ் நேவிகேஷன், மெரிடியன் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை ஆப்ஷனலாக கிடைக்கும்.

இதேபோன்று, டைனமிக் பேக்கில் 19 இஞ்ச் அலாய் வீல்கள், ரியர் ஸ்பாய்லர், ஸ்பெஷலான கருப்பு வண்ணம் போன்றவற்றை பெறலாம். எச்எஸ்இ வேரியண்ட்டில் புதிய முன்பக்க கிரில், விண்ட்சர் லெதர், 19 இஞ்ச் ஸ்பார்க்கிள் சில்வர் வீல்கள் ஆகியவை கிடைக்கும்.
மேம்படுத்தப்பட்ட லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர் எஸ்யூவியில் 9 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. ஆட்டோ டெர்ரெய்ன் ரெஸ்பான்ஸ் சிஸ்டமும் வழங்கப்படுகிறது. லேண்ட்ரோவர் எவோக் காரைவிட குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








