புதிய ஃபேபியாவின் ஹெட்லைட்டை கத்தரி போட்டு டீசராக வெளியிட்ட ஸ்கோடா

By Saravana

நம் நாட்டில் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கும் ஸ்கோடா ஃபேபியா காரின் புதிய மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மூன்றாம் தலைமுறை மாடலாக வெளிவரும் புதிய ஸ்கோடா ஃபேபியா கார் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் பாரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய மாடலின் ஸ்கெட்ச் படத்தை சமீபத்தில் ஸ்கோடா வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், புதிய ஃபேபியா காரின் முதல் டீசரை ஸ்கோடா வெளியிட்டுளளது.

Skoda Fabia

புதிய ஃபேபியா காரின் புரொஜெக்டர் ஹெட்லைட்டை மட்டும் கத்தரி போட்டு டீசராக வெளியிட்டிருக்கிறது. ஹெட்லைட்டுடன் முகப்பு கிரில்லும் இணைக்கப்பட்டிருப்பது டீசரில் தெரிகிறது.

வடிவமைப்பு செலவீனத்தை குறைப்பதற்காக ஃபோக்ஸ்வேகனின் எம்க்யூபி பிளாட்ஃபார்மை விட்டுவிட்டு, தனது பிக்யூ25 பிளாட்ஃபார்மிலேயே புதிய ஃபேபியா காரை வடிவமைத்துள்ளது ஸ்கோடா ஆட்டோ.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வெளிவர இருக்கிறது. பெட்ரோல் மாடலில் 3 மற்றும் 4 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கும். இதேபோன்று, டீசல் மாடலில் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச அளவில் புதிய ஸ்கோடா ஃபேபியா கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 13, 2014, 18:03 [IST]
English summary
Czech Republic car maker Skoda has released a teaser image of new Fabia hatchback's headlight housing design.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+