புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் அறிமுகம்- விபரம்
புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் பஸாத் காரின் படங்கள் மற்றும் விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட தோற்றத்திலும், வசதிகளிலும் பல விதத்தில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
எட்டாவது தலைமுறை மாடலாக விற்பனைக்கு வரும் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் காரின் சிறப்பம்சங்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

பிளாட்ஃபார்ம்
ஆடி ஏ3 செடான் கார் மற்றும் ஸ்கோடா ஆக்டாவியா கார்கள் கட்டமைக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகனின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய பஸாத் காரும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டதன் மூலம் புதிய பஸாத் காரின் எடை குறைக்கப்பட்டிருப்பதால் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.

ஹைபிரிட் மாடல்
புதிய பஸாத் காரை ஹைபிரிட் மாடலிலும் வெளியிடுவதற்கு ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. ஒருமுறை முழுவதும் எரிபொருள் நிரப்பினால் 900 கிமீ செல்லும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்
2015 மாடலாக வரும் எட்டாம் தலைமுறை பஸாத் காரில் எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். காரின் இயக்கநிலை தகவல்களை உடனுக்குடன் அளிக்கும் ஆக்டிவ் இன்ஃபோ டிஸ்ப்ளே மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகியவை முக்கிய அம்சங்கள். விண்ட் ஷீல்டு கண்ணாடியில் தகவல்களை காணும் ஹெட் அப் டிஸ்ப்ளே வசதியுடனும் வருகிறது.

நவீன வசதிகள்
ஃப்ரண்ட் அசிஸ்ட், எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம், ட்ரெயல் அசிஸ்ட், டிராஃபிக் ஜாம் அசிஸ்ட் என பலவிதமான நவீன வசதிகளை கொண்டிருக்கும்.

எஞ்சின்
எஞ்சின் விபரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. ஆனால், இரண்டு பெட்ரோல் எஞ்சின்கள் மற்றும் இரண்டு டீசல் எஞ்சின் கொண்ட மாடல்களில் வருவதாக தெரிகிறது. 1.4 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.8 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின்கள் மற்றும் 1.6 லிட்டர் டிடிஐ மற்றும் 2.0 லிட்டர் டிடிஐ எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதிப்பு மிக்க கார்
விலையுயர்ந்த கார்களில் கிடைக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களை நடுத்தர வகையிலான பஸாத் கொண்டிருக்கும். இது கொடுக்கும் பணத்திற்கு மதிப்புமிக்க கவர்ச்சிகர கார் மாடலாக இருக்கும் என்று ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








