புதிய தலைமுறை வால்வோ எக்ஸ்சி90 காரின் படங்கள், விபரங்கள் வெளியீடு!

By Saravana

புதிய தலைமுறை வால்வோ எக்ஸ்சி90 கிராஸ்ஓவர் சொகுசு மாடலின் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய காரின் டிசைன் எதிர்காலத்தில் அறிமுகமாகும் புதிய வால்வோ கார்களிலும் பயன்படுத்தப்படும்.

உலகின் மிக பாதுகாப்பான கார் மாடல் என்ற ஸ்லோகத்துடன் இந்த புதிய தலைமுறை எக்ஸ்சி90 காரை வால்வோ அறிமுகம் செய்துள்ளது. அது சம்பந்தமான சில பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும் ஏற்கனவே வெளியிட்டது. ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து சீனாவை சேர்ந்த கீலி ஆட்டோமொபைல் நிறுவனத்தின் கீழ் வால்வோ சென்ற பின்னர் வெளிவரும் முதல் கார் மாடல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

படங்கள், தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய கட்டுமானம்

புதிய கட்டுமானம்

Scalable Product Architecture(SAC) என்ற புதிய பிளாட்ஃபார்மில் இந்த புதிய வால்வோ எக்ஸ்சி90 கிராஸ்ஓவர் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிளாட்ஃபார்மின் அடிப்படையில் புதிய தலைமுறை வால்வோ கார்கள் வடிவமைக்கப்படும். புதிய வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவி 3 வரிசை இருக்கை அமைப்பு கொண்டது. 7 இருக்கைகள் உள்ளன.

 டிசைன்

டிசைன்

முற்றிலும் புதிய முகப்பு டிசைன் வெகுவாக கவரும் வகையில் இருக்கிறது. குறிப்பாக, பகல்நேர ரன்னிங் விளக்குகள், புதிய கிரில் டிசைன் போன்றவை காருக்கு புதுமையை தருகிறது. 22 இஞ்ச் அலாய் வீல்கள் கூடுதல் கம்பீரத்தை தருகின்றன.

 எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

ஐரோப்பிய மார்க்கெட்டில் பல்வேறு வகை பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் இந்த புதிய காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு வால்வோ திட்டமிட்டுள்ளது. இதுதவிர, ஹைபிரிட் மாடலும் வர இருக்கிறது. அமெரிக்காவில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்கள் மட்டுமே விற்பனைக்கு விடப்படும்.

 விபத்தில்லா இலக்கு

விபத்தில்லா இலக்கு

2020ம் ஆண்டிற்குள் தனது புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் வரும் புதிய கார் மாடல்கள் விபத்தில்லா பயணத்தை வழங்கும் என வால்வோ மார்தட்டுகிறது. தனது கார்களால் மரணம் அல்லது படுகாயம் என்ற பேச்சுக்களுக்கே இடமில்லாத வகையில் தயாரிக்கப் போவதாகவும் மார்தட்டுகிறது.

விற்பனைக்கு எப்போது?

விற்பனைக்கு எப்போது?

அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து இந்த புதிய கார் இங்கிலாந்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. 45,785 பவுண்ட் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள இந்த மெகா சைஸ் சொகுசு கார் வரும் அக்டோபரில் நடைபெற இருக்கும் பாரிஸ் மோட்டார் ஷோவில் முறைப்படி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 27, 2014, 16:40 [IST]
English summary
Swedish auto maker Volvo has revealed its next generation XC90 crossover.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+