அழகை அள்ளி பூசி வந்த புதிய மஸ்தா எம்எக்ஸ்-5 மியாட்டா...!!
உலகின் அதிகம் விற்பனையான 2 சீட்டர் ஸ்போர்ட்ஸ் கார் என்ற பட்டத்தை சொந்தமாக்கி வைத்திருக்கும் மாடல் மஸ்தா எம்எக்ஸ்-5 மியாட்டாதான்.
இந்த நிலையில், மஸ்தா எம்எக்ஸ்-5 மியாட்டா காரின் புதிய தலைமுறை மாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய காரின் டிசைன் சர்வதேச அளவில் கார் பிரியர்களையும், ஆட்டோமொபைல் நிபுணர்களையும் கவர்ந்திழுத்துள்ளது.

4ம் தலைமுறை
கடந்த 1989ம் ஆண்டு இந்த ரோட்ஸ்டெர் பாடி ஸ்டைல் கொண்ட ஓபன் டாப் கார் மாடலை மஸ்தா அறிமுகம் செய்தது. மிக எளிமையாகவும், சரியான விலையிலும் கொண்டு வரப்பட்ட இந்த கார் மாடல் 25 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் அதிக வரவேற்பு கொண்ட மாடலாக விளங்குகிறது.

விற்பனை
25ம் ஆண்டை தொட்டிருக்கும் மஸ்தா எம்எக்ஸ்-5 மியாட்டா கார் உலகின் அதிகம் விற்பனையான 2 சீட்டர் ரோட்ஸ்டெர் மாடலாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 9.40 லட்சம் கார்களை மஸ்தா விற்பனை செய்துள்ளது.

டிசைன்
மஸ்தா நிறுவனத்தின் புதிய "Kodo" டிசைன் கான்செப்டில் இந்த புதிய கார் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சிறப்பம்போல் இதன் பாடி செதுக்கப்பட்டிருக்கிறது. அளவான ஹெட்லைட்டுகள், முகப்பு கிரில், அலாய் வீல்கள், பானட், இருக்கைகள், இன்டிரியர், பின்புற டிசைன் என அனைத்தும் அசத்தல்கள்தான்.

எடை குறைவு
தற்போதைய மாடலைவிட புதிய மாடலாக வர இருக்கும் மஸ்தா எம்எக்ஸ்5 மியாட்டா கார் 220 பவுண்ட்டுகள் வரை எடை குறைவாக இருக்கும். எஞ்சின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

அறிமுகம்
வரும் அக்டோபரில் நடைபெற இருக்கும் பாரிஸ் மோட்டார் ஷோவில் இந்த புதிய கார் முறைப்படி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு செல்லும் என மஸ்தா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








