அடுத்த ஆண்டு வருகிறது டொயோட்டா இன்னோவா ஃபேஸ்லிஃப்ட்!
அடுத்த ஆண்டு மத்தியில் டொயோட்டா இன்னோவா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மாருதி எர்டிகா, ஹோண்டா மொபிலியோ கார்களால் டொயோட்டா இன்னோவாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை போக்கிக் கொள்ளும் விதத்தில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய இன்னோவா காரை டொயோட்டா அறிமுகம் செய்ய உள்ளது.

டொயோட்டாவின் புதிய பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய இன்னோவா கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய மாடலைவிட தோற்றத்தில் இன்னும் கவர்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய மாடல் சமீபத்தில் பெங்களூர் சாலைகளில் வைத்து சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. புதிய பாடி பேனல், சிறந்த இடவசதி, கூடுதல் வசதிகள் என இந்திய வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு புதிய அனுபவத்தை இன்னோவா வழங்கும் என நம்பலாம்.
அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய டொயோட்டா இன்னோவா கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








