டட்சன் கோ உள்பட 3 புதிய கார்கள் இன்று ரிலீஸ்!
நம் நாட்டு கார் மார்க்கெட்டில் இன்று மூன்று புதிய கார் மாடல்கள் விற்பனைக்கு வருகின்றன. அதில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் டட்சன் கோ ஹேட்ச்பேக் காரும் ஒன்று.
இதுதவிர, புதுப்பொலிவுடன் கூடிய ரெனோ ஃப்ளூயன்ஸ் மற்றும் வால்வோ எஸ்80 சொகுசு கார்களும் இன்று விற்பனைக்கு வருகின்றன.

டட்சன் கோ
ரூ.3 லட்சம் ஆரம்ப விலையில் டட்சன் கோ கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியாளர்களைவிட அதிக திறன் கொண்ட எஞ்சின், சிறப்பான இடவசதியுடன் இந்த புதிய கார் வருவதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

முன்பதிவு
டட்சன் கோ காருக்கு ஏற்கனவே முன்பதிவு நடந்து வருகிறது. இன்று விலை விபரத்தை அறிவிப்பதுடன், முதல் காரும் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ரெனோ ஃப்ளூயன்ஸ் ஃபேஸ்லிஃப்ட்
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த ஃபேஸ்லிஃப்ட் ரெனோ ஃப்ளூயன்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டதோடு, விலை விபரங்களும் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதனால், இன்று முதல் கார் டெலிவிரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

அம்சங்கள்
புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், புதிய அலாய் வீல்கள், புதிய முகப்பு ஆகியவை தற்போது இடம்பிடித்துள்ளன. டேஷ்போர்டு, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வால்வோ எஸ்80 சொகுசு கார்
இதுவும் புதுப்பொலிவு பெற்ற மாடல் என்பதோடு, சில கூடுதல் அம்சங்களுடன் வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் விற்பனைக்கு வருகிறது.

அம்சங்கள்
புதிய கிரில், புதிய அலாய் வீல்கள், சென்சஸ் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம்,புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் ஆகியவற்றை கொண்டிருக்கிறது. ஆடி ஏ6 மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications