ரூ.5 லட்சத்திற்குள் நல்ல கண்டிஷனில் கிடைக்கும் யூஸ்டு செடான் கார்கள்!

இந்திய மார்க்கெட்டில் காம்பெக்ட் செடான் மற்றும் காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களுக்கும் கணிசமான வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால், இந்த இரு மார்க்கெட்டிலும் புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதற்கு அனைத்து கார் நிறுவனங்களும் கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளன. குறிப்பாக, காம்பெக்ட் செடான் மார்க்கெட்டில் பல மாடல்கள் வரிசைக் கட்டி வருகின்றன. மாருதி, ஹோண்டாவை தொடர்ந்து சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனமும் இந்த மார்க்கெட்டில் புதிய மாடலை இறக்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து, டாடாவின் புதிய காம்பெக்ட் செடான் வர இருக்கிறது. இந்த வரிசையில் தற்போது நிசான் நிறுவனமும் புதிய காம்பெக்ட் செடான் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. ஆட்டோமொபைல் இணையதளம் வெளியிட்டிருக்கும் மைக்ரா காம்பெக்ட் செடான் காரின் மாதிரிப் படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

மாருதி டிசையர்

மாருதி டிசையர்

இந்திய மார்க்கெட்டின் வெற்றிகரமான மாடலாக மாருதி டிசையர் வலம் வருகிறது. இது வாடிக்கையாளர் மத்தியில் அதிக நம்பிக்கையை பெற்ற கார் மாடலும் கூட. வெறும் 3 ஆண்டுகள் பழமையான மாருதி டிசையரின் டீசல் மாடலின் பேஸ் வேரியண்ட் ரூ.4.5 லட்சத்தில் கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் இதனை பெறுவதோடு, டீசல் மாடலாகவும் இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு போட்ட பட்ஜெட்டில் இந்த காரை வாங்கிவிட முடியும். இந்த காரில் 75 பிஎச்பி ஆற்றல் கொண்ட 1.3 லிட்டர் ஃபியட் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஃபோர்டு கிளாசிக்

ஃபோர்டு கிளாசிக்

செடான் மார்க்கெட்டில் மாருதி டிசையருக்கு அடுத்ததாக அதிகம் விரும்பப்படும் கார் மாடல் இது. இந்த காரில் 68 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.4 லிட்டர் டிடிசிஐ டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 40,000 கிலோமீட்டர் அல்லது 3 ஆண்டுகள் பழமையான கிளாசிக் செடான் காரின் டீசல் மாடல் ரூ.4.3 லட்சம் முதல் ரூ.4.6 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

ஃபியட் லீனியா

ஃபியட் லீனியா

மிட்சைஸ் செக்மென்ட்டில் சிறப்பான கார் மாடல்களில் ஃபியட் லீனியாவும் ஒன்று. டிசைன், பெர்ஃபார்மென்ஸ், மைலேஜ் ஆகிய அனைத்திலும் நிறைவான கார். 91 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கார் வாடிக்கையாளர்களிடமும் நன்மதிப்பை பெற்றது. தற்போது 3 ஆண்டுகள் பழமையான காரின் டீசல் மாடல் ரூ.4.8 லட்சம் விலையில் கிடைக்கிறது.

மஹிந்திரா வெரிட்டோ

மஹிந்திரா வெரிட்டோ

மஹிந்திரா வெரிட்டோ கார் ஓர் முழுமையான செடானுக்குரிய அனைத்து தகுதிகளையும் கொண்ட மாடல். ரெனோ லோகனாக இருந்து மஹிந்திரா வெரிட்டோவாக மாறிய இந்த காரின் பின் இருக்கையில் 3 பெரியவர்கள் தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும். இந்த காரில் ரெனோவின் 1.5 லிட்டர் கே9கே டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. சிறந்த மைலேஜ் கொண்ட காராகவும் கூறலாம். 40,000 கிமீ ஓடிய மஹிந்திரா வெரிட்டோ கார் ரூ.4 லட்சம் விலையில் கிடைக்கிறது.

டொயோட்டா எட்டியோஸ்

டொயோட்டா எட்டியோஸ்

டொயோட்டா எட்டியோஸ் காரின் டீசல் மாடலும் மார்க்கெட்டில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. தனிநபர் மற்றும் டாக்ஸி மார்க்கெட் என இரண்டிலும் ஜொலிக்கிறது. 3 ஆண்டுகள் பழமையான எட்டியோஸ் டீசல் காரின் ஜிடி மாடல் ரூ.4.5 லட்சத்தில் யூஸ்டு மார்க்கெட்டில் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, March 28, 2014, 9:41 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+