சூரத்தில் 500 புன்ட்டோ எவோ கார்களை தீபாவளி பரிசளித்த வைர நிறுவனம்!
குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த வைர நிறுவனம் ஒன்று 500 பணியாளர்களுக்கு ஃபியட் புன்ட்டோ எவோ கார்களை தீபாவளி பரிசாக கொடுத்து அசத்தியிருக்கிறது.
குஜராத்தை சேர்ந்த மீடியாக்களில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான, நிகழ்ச்சி அங்குள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் சமீபத்தில் நடத்தப்பட்டது. அப்போது, பணியாளர்களிடம் கார்கள் ஒப்படைக்கப்பட்டன.

வைர நிறுவனம்
5,000 பணியாளர்கள் கொண்ட அந்த வைர நிறுவனத்தில் பணிபுரியும் 500 பேருக்கு ஃபியட் புன்ட்டோ கார்கள் தீபாவளி பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

தடுமாறிய டீலர்
சூரத்தை சேர்ந்த டீலரால் நிறுவனம் ஆர்டர் செய்த கார்களை ஒரே நேரத்தில் சப்ளை செய்வதில் எழுந்த பிரச்னையையடுத்து, பரோடாவை சேர்ந்த ஃபியட் டீலர் உதவி செய்து கார்களை சப்ளை செய்துள்ளார்.

ஒரு மாத விற்பனை
புன்ட்டோ எவோ கார்களின் ஒரு மாத விற்பனையை ஒரே நிறுவனம் ஆர்டர் செய்து பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சூரத் நிறுவனம்
சூரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம்தான் தனது பணியாளர்களுக்கு காஸ்ட்லி தீபாவளி பரிசுகளை வழங்கியுள்ளது.

கார் மட்டுமா
500 பேருக்கு ஃபியட் புன்ட்டோ எவோ கார்களும், 200 பேருக்கு வீடுகளும், 500 பணியாளர்களுக்கு ஆபரணங்களையும் வழங்கியுள்ளது.

சர்வீஸ் மையம்
நிறுவன வளாகத்தில் பணியாளர்களுக்காக பிரத்யேக கார் சர்வீஸ் மையம் அமைக்கும் கோரிக்கையும் எழுந்துள்ளது.

விற்பனை உயரும்
ஃபியட் விற்பனையில் இந்த மாதம் நிச்சயம் உயர்வை காணும் வாய்ப்பு இருக்கிறது.

புன்ட்டோ எவோ கார்
ஃபியட் புன்ட்டோ எவோ கார் சமீபத்தில்தான் புதுப்பொலிவுடன் விற்பனைக்கு வந்தது. இந்தநிலையில், ஒரே நிறுவனம் 500 கார்களை ஆர்டர் செய்து பெற்றிருப்பது அந்த காரின் மதிப்பை உணர்த்துவதாக இருக்கிறது.

என்னதான் இருக்கிறது புன்ட்டோவில்...
இத்தாலிய தயாரிப்பான ஃபியட் புன்ட்டோ எவோ காரின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட முழு விபரங்களை இங்கே கிளிக் செய்து காணலாம்.
Images Source: Fiat Moto Club


Click it and Unblock the Notifications








