தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இருக்கும் புதிய கார்கள்!
தீபாவளி பண்டியையொட்டி சில புதிய கார் மாடல்கள் மார்க்கெட்டுக்கு வர இருக்கின்றன. புதுப்பொலிவு பெற்ற மாடல்களும், புதிய மாடல்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.
தீபாவளிக்கு கார் முன்பதிவு செய்ய காத்திருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த பட்டியலை வழங்குகிறோம். வாருங்கள் ஸ்லைடருக்கு செல்லலாம்.

புதிய ஆல்ட்டோ கே10
ஆல்ட்டோ 800 காரில் 1.0 லிட்டர் கே சீரிஸ் எஞ்சினை பொருத்தி புதிய ஆல்ட்டோ கே10 காராக விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மாருதி. ஆல்ட்டோ 800 காரவிட இதனை வித்தியாசப்படுத்தும் விதத்தில் புதிய ஹெட்லைட், டெயில் லைட்டுகள் மற்றும் சில டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். இந்த காரில் 1.0 லிட்டர் எஞ்சின் மட்டுமின்றி, ஆட்டோமேட்டட் டிரான்ஸ்மிஷன் கொண்டதாகவும் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனும் மற்றொரு ஆப்ஷனாக இருக்கும். தற்போதைய மாடலைவிட ரூ.30,000 கூடுதல் விலையில் வரும் வாய்ப்புள்ளது.

ஃபியட் அவென்ச்சுரா
புன்ட்டோ எவோ மற்றும் லீனியா கார்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட இருக்கும் கிராஸ்ஓவர் மாடலாக வருகிறது புதிய ஃபியட் அவென்ச்சுரா. புன்ட்டோ எவோ அடிப்படையிலான இந்த மாடல் 205மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வருகிறது. மேலும், 16 இஞ்ச் அலாய் வீல்கள் மிக கம்பீரத் தோற்றத்தை அளிக்கிறது. 1.4 லிட்டர் ஃபயர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மார்க்கெட்டை குறிவைத்து விலை நிர்ணயம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தீபாவளியையொட்டி விற்பனைக்கு வந்துவிடும் வாய்ப்புள்ளது.

மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட்
ஸ்விஃப்ட் காரின் காம்பேக்ட் செடான் மாடலான டிசையர் காரும் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது. முன்பக்க கிரில், பம்பர் மற்றும் பனி விளக்குகள் அறை ஆகியவற்றில் மாற்றங்களோடு வருகிறது. ஸ்மோக்டு ஹெட்லைட்டுகளும் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கும். ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி சிஸ்டம் ஆகியவை இந்த காரில் இடம்பெற்றிருக்கும். எஞ்சினில் மாற்றங்கள் இருக்காது.

ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி
ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்களுக்கான மாடலாக வர்ணிக்கப்படும் ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி அதிகாரப்பூர்வமான விற்பனை அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியிடப்பட உள்ளது. ஹார்டு டாப் மற்றும் சாஃப்ட் டாப் கூரைகளுடன் கிடைக்கும். 4 வீல் டிரைவ் மற்றும் ரியர் வீல் டிரைவ் ஆப்ஷன்களில் வருகிறது. இந்த எஸ்யூவியில் 2.6 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது 82 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கும். ரூ.6.25 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும்.

மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்
இந்தியாாவில் இரண்டாம் தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், அந்த கார் புதுப்பொலிவுடன் வர இருக்கிறது. பகல்நேர ரன்னிங் விளக்குகள், புதிய அலாய் வீல்கள், பார்க்கிங் சென்சார்கள், ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி, ஓட்டுனர் பக்கத்திற்கு ஆட்டோமேட்டிக் பவர் விண்டோ ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கும். எஞ்சினில் மாற்றங்கள் இருக்காது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ 45 ஏஎம்ஜி
வரும் 27ந் தேதி பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவியின் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த காரில் 360 பிஎச்பி பவரையும் 450 என்எம் டார்க்கையும் வழங்கும் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் 4மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும் வருகிறது. இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








