உலகின் அதிகம் சம்பளம் பெறும் விளையாட்டு வீரராகும் வெட்டல்!

By Saravana

உலகின் அதிகம் சம்பளம் பெறும் விளையாட்டு வீரர் என்ற பெருமையை நடப்பு ஃபார்முலா- 1 சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல் பெற இருக்கிறார். தற்போது ரெட்புல் ரேஸிங் ஃபார்முலா- 1 கார் பந்தய அணிக்காக களமிறங்கி வரும் வெட்டல், அடுத்த ஆண்டு முதல் ஃபெராரி அணிக்காக களமிறங்க உள்ளார்.

உலகின் பணக்கார விளையாட்டாக கருதப்படும் ஃபார்முலா-1 கார் பந்தயங்களில் வீரர்களுக்கு கோடிகளை கொட்டி கொடுப்பது சாதாரண தகவல்தான். ஆனால், ஃபெராரி நிறுவனம் இந்தளவு ஒரு வீரருக்கு சம்பளத்தை கொடுத்து இழுத்திருப்பது ரேஸ் உலகின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது. இதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஃபார்முலா-1 பந்தய களத்தில் பல முன்னணி கார் நிறுவனங்கள் இருந்து வருகின்றன. ஆனால், ஃபெராரி நிறுவனம் தனது பிராண்டு மதிப்புக்கு ஃபார்முலா- 1 பந்தயங்களை மிக முக்கியமானதாக கருதுகிறது. ஃபார்முலா-1 களத்தின் மூலம் தனது தொழில்நுட்ப வலிமையை பரைசாற்றும் தளமாக கருதுகிறது.

வெட்டலை இழுத்த கையோடு, தனது ஃபார்முலா- 1 காரின் வடிவமைப்பிலும் பல புதிய மாற்றங்களை செய்யவும் திட்டமிட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு சூமாக்கர் விடைகொடுத்தது முதல் ஒரு சாம்பியன் பட்டத்தை கூட கைப்பற்றவில்லை. மேலும், கடந்த ஆண்டிலிருந்து ஒரு போட்டியில் கூட ஃபெராரி வெற்றிபெறவில்லை.

இந்த நிலையில், ஃபார்முலா-1 களத்தில் மீண்டும் அதிரடி ஆட்டத்தை காட்ட வெட்டலை ஒப்பந்தம் செய்துள்ளது. ஃபெராரி தலைவர் பதவியிலிருந்து லூகா டி மான்டிஸிமோலோ தூக்கப்பட்டதற்கு, ஃபார்முலா- 1 பந்தயங்களில் ஃபெராரி அணி சோபிக்கவில்லை என்பதும் ஒரு காரணம்.

வெட்டலுக்கான மலைக்க வைக்கும் சம்பளம், அதிக சம்பளம் பெறும் ஃபார்முலா-1 வீரர்களின் விபரங்களை ஸ்லைடரில் வழங்கியுள்ளோம்.

டாப்- 5 வீரர்கள்

டாப்- 5 வீரர்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் டாப்- 5 பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அதிக சம்பளம் பெறும் ஃபார்முலா-1 வீரர்களின் பட்டியலை காணலாம்.

 5. ஜென்சன் பட்டன்

5. ஜென்சன் பட்டன்

இங்கிலாந்தை சேர்ந்த ஜென்சன் பட்டன் வில்லியம்ஸ் ஃபார்முலா- 1 அணி சார்பில் முதன்முதலில் களமிறங்கினார். 2000ம் ஆண்டு முதல் ஃபார்முலா- 1 பந்தயங்களில் பங்கேற்று வரும் இவர் இதுவரை 263 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதில், 15 வெற்றிகளையும், ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். தற்போது மெக்லாரன்- மெர்சிடிஸ் அணி சார்பில் பங்கேற்று வருகிறார். ஆண்டுக்கு 20 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.122.84 கோடி) சம்பளமாக பெறுகிறார்.

 4. லூயிஸ் ஹாமில்டன்

4. லூயிஸ் ஹாமில்டன்

இவரும் இங்கிலாந்தை சேர்ந்தவர்தான். தற்போது மெர்சிடிஸ் அணிக்காக பங்கேற்று வரும் இவர் இதுவரை 31 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார். 2008ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்டுக்கு 24 மில்லியன் டாலர்களை சம்பளமாக பெறுகிறார். இந்திய மதிப்பில் ரூ.147.41 கோடி.

3.கிமி ராய்கோனேன்

3.கிமி ராய்கோனேன்

பின்லாந்து நாட்டை சேர்ந்தவரான கிமி ராய்கோனேன் 2001ம் ஆண்டு தனது ஃபார்முலா-1 பந்தய களத்தில் இறங்கினார். இதுவரை 20 போட்டிகளில் வென்றிருக்கும் இவர் 2007ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றவர். 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் வேர்ல்டு ராலி சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பங்கேற்றார். தற்போது ஃபெராரி அணி சார்பில் பங்கேற்று வரும் இவர் ஆண்டுக்கு 27 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.165.84 கோடி) சம்பளமாக பெறுகிறார்.

2.ஃபெர்னான்டோ அலான்சோ

2.ஃபெர்னான்டோ அலான்சோ

அதிக சம்பளம் பெறும் ஃபார்முலா- 1 வீரர்களில் இரண்டாம் இடத்தை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஃபெர்னான்டோ அலான்சோ பிடிக்கிறார். 2001ம் ஆண்டு ஃபார்முலா-1 பந்தயத்தில் களமிறங்கிய அலான்சோ தற்போது ஃபெராரி அணிக்காக பங்கேற்று வருகிறார். இதுவரை 32 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் இவர் 2005 மற்றும் 2006ம் ஆண்டுகளில் இருமுறை சாம்பியன் பட்டத்தை வென்றவர். இவரும் 27 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பளமாக பெறுகிறார்.

 அம்மாடியோவ் வெட்டல்

அம்மாடியோவ் வெட்டல்

இதுவரை பட்டியலில் பார்த்தவர்களுடன் ஒப்பிட முடியாத இடத்திற்கு செல்ல இருக்கிறார் செபாஸ்டியன் வெட்டல். ஆண்டுக்கு 80 மில்லியன் டாலர்களை(இந்திய மதிப்பில் ரூ.491.36 கோடி) வெட்டலுக்கு ஃபெராரி நிறுவனம் சம்பளமாக வழங்க இருக்கிறது. இதுவரை இல்லாத அளவு, கிட்டத்தட்ட 500 கோடியை வெட்டல் சம்பளமாக பெற இருப்பது குறிப்பிடத்தக்கது. வெட்டலின் சாதனைகளை எடுத்து பார்க்கப்போனால், ஃபார்முலா- 1 பந்தயத்தில் இதுவரை 39 வெற்றிகளை பெற்றிருப்பதோடு, கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்று வந்திருக்கிறார். ஜெர்மனியை சேர்ந்த ஃபார்முலா- 1 ஜாம்பவான் மைக்கேல் சூமாக்கர் வழியில், செபாஸ்டியன் வெட்டலும் ஃபெராரி அணிக்கு பல வெற்றிகளை குவித்து தருவார் என்ற எதிர்பார்ப்பு ஃபார்முலா-1 ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 15, 2014, 16:26 [IST]
English summary
The defending Formula One World Champion Sebastian Vettel is all set to be the highest paid athlete in the world as he steps out of Red Bull Racing and signs a USD 80 million (INR 491.36 crores) deal with Ferrari for the year 2015.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+