பெங்களூரில் புதிய ஃபியட் புன்ட்டோ இவோ விற்பனைக்கு வந்தது- விலை விபரம்
பெங்களூரில் புதிய ஃபியட் புன்ட்டோ இவோ கார் நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய மார்க்கெட்டுக்காக இத்தாலியில் டிசைன் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய மாடல் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் அம்சங்களுடன் வந்துள்ளது.
இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் இந்திய சாலை நிலைகளை கருத்தில்கொண்டு 195 மிமீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 16 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. முந்தைய மாடலைவிட கையாளுமையிலும் சிறப்பாக இருக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள், ஸ்மார்ட் வைப்பர்கள் போன்றவையும் வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்கள். 15,000 கிமீ.,க்கு ஒருமுறை சர்வீஸ் இடைவெளி, 3 ஆண்டுகள் வாரண்டி கொண்டதாக ஃபியட் புன்ட்டோ இவோ கார் வந்துள்ளது.
மூன்று பெட்ரோல் மற்றும் 4 டீசல் வேரியண்ட்டுகளில் கிடைக்கும். அனைத்து வேரியண்ட்டுகளிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. பெங்களூர் மார்க்கெட்டுக்கான விலை விபரங்களை கீழே காணலாம்.
பெட்ரோல்
ஆக்டிவ்(1.2லி): ரூ.4,65,415
டைனமிக்(1.2லி): ரூ.5,22,426
எமோஷன்(1.2லி): ரூ.6,78,763
டீசல்
ஆக்டிவ்(76பிஎஸ்): ரூ.5,37,909
டைனமிக்(76பிஎஸ்): ரூ.6,33,664
எமோஷன்(76பிஎஸ்): ரூ.6,96,725
ஸ்போர்ட்(93பிஎஸ்): ரூ.7,33,794
(அனைத்தும் பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலை)


Click it and Unblock the Notifications








