சகல சம்பத்துகளுடன் வரும் டாடா சஃபாரி ஸ்ட்ராம் ஃபேஸ்லிஃப்ட்!
பல புதிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது டாடா மோட்டார்ஸ்.
மேலும், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடலும் வர இருப்பதாக கிடைத்துள்ள தகவல் எஸ்யூவி காதலர்கள் மத்தியில் பெரிய ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றங்கள்
வெளிப்புறத் தோற்றத்தில் சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். இதேபோன்று, இன்டிரியரிலும் சில மாற்றங்களுடன் வருகிறது.

எஞ்சினிலும் மாற்றங்கள்
டாடா சஃபாரி ஸ்ட்ராம் 2.2 லிட்டர் வேரிகோர் டீசல் எஞ்சினில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. இதனால், 140 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்துவதாக இருந்த இந்த எஞ்சின் 150 பிஎச்பி ஆற்றலை அதிகபட்சம் தரும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

வசதிகள்
ஹார்மன் மியூசிக் சிஸ்டம், 10 ஸ்பீக்கர்கள், இன் பில்ட் டச் ஸ்கிரீன் நேவிகேஷன் சிஸ்டம் போன்றவை சிறப்பாக இருக்கும்.

இதுதான் பரபரப்பு
டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடலை இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டாடா திட்டமிட்டுள்ளது. இது மிகச்சிறந்த ஆஃப் ரோடு பெர்ஃபார்மென்ஸ் மற்றும் மிகச்சரியான விலையில் வருவதால் எஸ்யூவி பிரியர்கள் மத்தியில் ஆவல் ஏற்பட்டிருக்கிறது.

இதர அம்சங்கள்
இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ், டியூவல் ஏர்பேக்குகள், எலக்ட்ரிக்கல் ரியர் வியூ கண்ணாடிகள் போன்ற பல நிரந்தர வசதிகளுடன் வருகிறது. மொத்தத்தில் எந்தவிதத்திலும் ஒரு குறைவில்லா எஸ்யூவி மாடலாக களமிறக்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








