ஆல்ட்டோ 800 போட்டியாக வரும் ரெனோ குட்டி காரின் மாதிரி படங்கள்!
அடுத்த ஆண்டு புத்தம் புதிய குட்டிக் காரை ரெனோ நிறுவனம் இந்திய மண்ணில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் ஹூண்டாய் இயான் கார்களுக்கு போட்டியாக வரும் இந்த கார் தற்போது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை கிளறியுள்ளது.
எஸ்பிஏ என்ற குறியீட்டுப் பெயரில் வடிவமைக்கப்பட்டு வரும் இந்த புதிய குட்டிக் கார் ரெனோ- நிசான் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய சிஎம்எஃப்- ஏ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.

இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் இந்த புதிய கார் உற்பத்தி செய்யப்படும் என்று ரெனோ நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஜெரோம் ஸ்டோல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்த புதிய குட்டிக் கார் எப்படியிருக்கும் என்பதை கற்பனை செய்து நோட்டிசியாஸ் ஆட்டோமோட்டிவாஸ் என்ற இணையதளம் மாதிரி படங்களை வெளியிட்டிருக்கிறது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டட்சன் ரெடி கோ கான்செப்ட்டை மனதில் வைத்து சில மாற்றங்களுடன் இந்த புதிய கார் கான்செப்ட்டின் படங்களை வெளியிட்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








