புதிய ஆல்ட்டோ கே10 'ஏஎம்டி' மாடலுக்கு கிடுகிடுவென உயரும் வெயிட்டிங் பீரியட்!

By Saravana

ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட புதிய மாருதி ஆல்ட்டோ கே10 காருக்கு காத்திருப்பு காலம் வெகுவாக அதிகரித்து வருகிறது.

செலிரியோவைத் தொடர்ந்து புதிய ஆல்ட்டோ கே10 காரிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டில் விற்பனையாகும் மிக குறைவான விலை ஆட்டோமேட்டிக் கார் மாடலாக இது குறிப்பிடப்படுகிறது.

Maruti Alto K10

இந்தநிலையில், செலிரியோவை போன்றே புதிய ஆல்ட்டோ கே10 காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக மாருதி அதிகாரி ஆர்.எஸ்.கல்சி தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் புதிய ஆல்ட்டோ கே10 கார் அறிமுக விழாவில் இதனை குறிப்பிட்ட கல்சி, புதிய ஆல்ட்டோ கே10 காரின் ஏஎம்டி மாடலுக்கு 2 மாதங்கள் வரை தற்போது காத்திருப்பு காலம் இருப்பதாக தெரிவித்தார்.

அதேவேளை, மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலை முன்பதிவு செய்வோருக்கு ஒரு வாரத்தில் காரை டெலிவிரி கொடுக்கப்படுகிறது. இந்த புதிய ஆல்ட்டோ கே10 காரில் 67 பிஎச்பி பவரையும், 90என்எம் டார்க்கையும் வழங்கும் 1.0 லிட்டர் கே- சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 13, 2014, 17:00 [IST]
English summary

 In a statement at the launch of the K10 in Bangalore, R.S. Kalsi, Executive Director, Maruti Suzuki, Sales and Marketing, said that the AMT variant is expected to have a waiting period for up to two months. However, as demand goes up, the waiting period is also likely to go up.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+