அமெரிக்காவில், சாலையை செப்பனிட கோரி நூதனப் போராட்டம்!

தினசரி செய்திகளில் சாலையை சீரமைக்கக்கோரி போராட்டம் என்ற செய்தி இல்லாமல் இல்லை. குறிப்பாக, மழைக்காலம் வந்து போனதும் இது போன்ற போராட்டங்களை தொடர்ந்து காண முடியும். போராட்டம், கோரிக்கை மனு என எது கொடுத்தாலும் ரோடு மட்டும் போட்டபாடில்லை என்று பலர் அங்கலாய்ப்பதை காணலாம்.

நம்ம ஊரில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் இது மாதிரியான சாலைகளை சீரமைக்கக்கோரி போராட்டங்கள் நடைபெறுவதுண்டு. இந்த நிலையில், சாலையை சீரமைக்க கூட்டங்களை சேர்க்காமல், ஒரு தனிநபர் நூதனமான போராட்டத்தை நடத்திக்காட்டியுள்ளார்.


 மோசமான சாலைகள்

மோசமான சாலைகள்

சிகாகோ நகரின் குடியிருப்புப் பகுதிகளில் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக இருந்துள்ளன. இதனை செப்பனிடுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாக தெரிகிறது.

நூதனப் போராட்டம்

நூதனப் போராட்டம்

சிகாகோ நகரைச் சேர்ந்த ஜிம் பாக்கர் என்பவர்தான் மவுனமாக இந்த காரியத்தை செய்து அப்பகுதி மக்களின் பாராட்டுதல்களை பெற்றிருக்கிறார்.

 மொசைக் அலங்காரம்

மொசைக் அலங்காரம்

சாலைகளில் இருந்த குண்டு, குழிகளில் மொசைக் மற்றும் சிமென்ட் பூச்சு மூலம் அழகுப்படுத்தியுள்ளார்.

 அதிகாரிகள் கப்சிப்

அதிகாரிகள் கப்சிப்

இது அந்த பகுதிவாசிகளை மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பொட்டில் அடித்தாற்போல் ஆகியுள்ளது.

 மலர் ஓவியங்கள்

மலர் ஓவியங்கள்

மொசைக் கற்கள் மற்றும் சிமென்ட் கொண்டு மலர் சென்டுகளை சாலையில் உருவாக்கி அசத்தியிருக்கிறார். எல்லா விதத்திலும் திறமையை காட்டியதோடு, இது ஒரு நூதன போராட்டமாகவும் அமைந்துவிட்டது.

ரோடு போடுவாங்களா சார்?

ரோடு போடுவாங்களா சார்?

இந்த மாதிரி பண்ணினா நம்ம ஊர்ல ரோடு போடுவாங்களா சார்?

Most Read Articles
மேலும்... #offbeat #ஆஃப் பீட்
English summary
A made up serial number that represents the large number of potholes that can be found in Chicago
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X