இலங்கையிலிருந்து 630 பஸ்களுக்கு ஆர்டரை பெற்ற அசோக் லேலண்ட்!
பஸ்களை சப்ளை செய்வதற்காக இலங்கையிலிருந்து 104 கோடி மதிப்புடைய பல்க் ஆர்டரை அசோக் லேலண்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது.
1982ம் ஆண்டு முதல் இலங்கையில் அசோக் லேலண்ட் நிறுவனம் அந்நாட்டு அரசுடன் இணைந்து கூட்டணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

இதனால், அங்கு பஸ் விற்பனையில் அசோக் லேலண்ட் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், தனியார் நிறுவனங்களுக்கு பஸ்களை சப்ளை செய்வதற்காக இலங்கை அசோக் லேலண்ட் நிறுவனம் பல்க் ஆர்டரை பெற்றிருக்கிறது.
மொத்தம் 104 கோடி மதிப்புடைய 630 பஸ்களை இலங்கைக்கு சப்ளை செய்ய இருக்கிறது அசோக் லேலண்ட் நிறுவனம். இதனால், மும்பை பங்கு சந்தையில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 0.22 சதவீதம் உயர்ந்தது.


Click it and Unblock the Notifications








