இந்த விலையிலா வருகிறது புதிய ஆடி கார்... கலக்கத்தில் பென்ஸ், பிஎம்டபிள்யூ

By Saravana

வரும் ஆகஸ்ட் மாதம் ஆடி கார் நிறுவனத்தின் புதிய ஏ3 செடான் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பது தெரிந்த விஷயம்தான். ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் தகவல் ஆடி ஏ3 கார் மீதான ஆவலை பன்மடங்கு கூட்டுவதாக இருக்கிறது.

ஆம், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஆடி கார் நிறுவனத்தின் மிக குறைவான விலை கொண்ட இந்த அழகு செடான் காரின் விலை குறித்த தகவல் வேகமாக பரவி வருகிறது. இத்தகவலை கேட்ட மெர்சிடிஸ் பென்ஸ் பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளன.


எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.26 லட்சத்தில் புதிய ஆடி ஏ3 செடான் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் புத்தம் புதிய ஆடி சொகுசு கார் மாடல் இந்த விலையில் வருவது பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போட்டியாளர்களை விட்டுவிட்டு இந்த காரை வாங்குவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

 சிறப்பம்சங்கள் குறைவு

சிறப்பம்சங்கள் குறைவு

குறைவான விலையில் வருவதால் ஆடியின் அக்மார்க் முத்திரையாக கூறப்படும் எல்இடி ஹெட்லைட்டுகள், லெதர் இன்டிரியர் போன்றவை இருக்காது. அதேவேளை, அலாய் வீல், லெதர் இன்டிரியர் போன்றவை டாப் வேரியண்ட்டில் கொடுக்கப்பட்டிருக்கும்.

டெலிவிரி

டெலிவிரி

இந்த மாதத்திலேயே உற்பத்தி துவங்கப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட்டில் விலை அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஓரிரு வாரத்திற்கு பின் டெலிவிரியும் துவங்கப்பட்டுவிடும்.

உலகின் சிறந்த கார் விருது

உலகின் சிறந்த கார் விருது

இந்த ஆண்டின் உலகின் சிறந்த கார் என்ற விருதை ஆடி ஏ3 செடான் கார் பெற்றிருக்கிறது. இதுமட்டுமல்ல, பாதுகாப்பிலும் சிறந்த காராக இருக்கிறது.

பாதுகாப்பான கார்

பாதுகாப்பான கார்

அமெரிக்க நெடுஞ்சாலை காப்பீட்டு கழக அமைப்பு(IIHS) நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் டாப் சேஃப்டி பிக்+ என்ற அதிகபட்ச மதிப்பீட்டை ஆடி ஏ3 செடான் கார் பெற்றிருக்கிறது. மொத்தம் 5 விதமான கிராஷ் டெஸ்ட் சோதனைகளுக்கு இந்த புதிய கார் உட்படுத்தப்பட்டது.

இந்தியாவில் அசெம்பிள்

இந்தியாவில் அசெம்பிள்

ஆடி ஏ4, ஆடி ஏ6, ஆடி க்யூ3, ஆடி க்யூ5 மற்றும் ஆடி க்யூ7 வரிசையில் இந்த புதிய காரும் அவுரங்காபாத் ஆலையில் அசெம்பிள் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே இந்த காரை மிக சவாலான விலையில் களமிறக்கப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 24, 2014, 11:43 [IST]
English summary
Premium German automaker Audi will launch the A3 sedan in India in August, at a starting price of around INR 26 lakh, according to Zigwheels. The latest offering from the Audi stables will be locally assembled and their most affordable car.
மேலும்... #audi #a3 #four wheeler #ஆடி #ஏ3
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+