பெங்களூரில் புதிய ஆடி ஏ8எல் சொகுசு கார் அறிமுகம்: விபரம்

By Saravana

பெங்களூரில் ஆடி ஏ8எல் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆடி கார் நிறுவனத்தின் இந்த புதிய சொகுசு கார் 4 விதமான எஞ்சின் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

இதுதவிர, பல்வேறு விதமான வெளிப்புற மற்றும் உட்புறத்துக்கான கஸ்டமைஸ் வசதிகளும் கொடுக்கப்படுகின்றன. பென்ஸ் எஸ் கிளாஸ் காருக்கு போட்டியை கொடுக்கும் அம்சங்களுடன் இந்த கார் வந்துள்ளது.


கஸ்டமைஸ் வசதிகள்

கஸ்டமைஸ் வசதிகள்

100 விதமான வெளிப்புற வண்ணங்கள், 23 வகையான லெதர் இன்டிரியர்கள், 12 விதமான மரவேலைப்பாடுகளுடன் இந்த புதிய கார் கிடைக்கும்.

 டிசைன் மாற்றம்

டிசைன் மாற்றம்

ஆடி ஏ8 கார் வரலாற்றில் முதல்முறையாக பானட், முன்பக்க கிரில் மற்றும் பம்பர் ஆகியவற்றில் அதிக மாற்றங்கள் செய்து செதுக்கியுள்ளனர். பின்புறமும் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதுடன், டெயில் லைட்டுகளுக்கு க்ரோம் கிரில் கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

இரு டீசல் மற்றும் இரு பெட்ரோல் என 4 விதமான மாடல்களில் வந்துள்ளது. இதில், 3.0 லிட்டர் மற்றும் 4.2 லிட்டர் குவாட்ரோ டீசல் மாடல்களிலும், 4.0 லிட்டர் குவாட்ரோ மற்றும் டபிள்யூ12 ஆகிய இரு பெட்ரோல் மாடல்களிலும் கிடைக்கும். அனைத்திலும் 8 ஸ்பீடு டிரிப்ட்ரோனிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும்.

மேட்ரிக்ஸ் ஹெட்லைட்

மேட்ரிக்ஸ் ஹெட்லைட்

புதிய ஆடி ஏ8எல் சொகுசு காரில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த எல்இடி ஹெட்லைட் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் கூச்சத்தை ஏற்படுத்தாது என்பதுடன், அதிக பிரகாசத்தையும் வழங்கும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

சாலை நிலையை உணர்ந்து செயல்படும் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன், பேங் அண்ட் ஒலுஃப்சென் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், பார்க் அசிஸ்ட், சர்ரவுண்ட் கேமரா, பனரோமிக் சன்ரூஃப், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போன்ற ஏராளமான வசதிகள் உள்ளன.

விலை விபரம்

விலை விபரம்

3.0 லிட்டர் டீசல் மாடல் ரூ.1.15 கோடி விலையிலும், 4.2 லிட்டர் குவாட்ரோ டீசல் மாடல் ரூ.1.26 கோடி விலையிலும், 4.0 லிட்டர் குவாட்ரோ பெட்ரோல் மாடல் ரூ.1.30 கோடி விலையிலும், டபிள்யூ12 மாடல் ரூ.1.80 கோடி விலையிலும் பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, June 9, 2014, 9:26 [IST]
English summary
German automaker Audi launched the new Audi A8L in Bangalore today. The all new flagship sedan sees prices starting from INR 1.15 crore for the 3.0 TDI variant, INR 1.26 crore for the 4.2 TDI Quattro variant, INR 1.30 crore for the 4.0 TFSI Quattro variant and INR 1.80 crore for the W12 variant. All prices are ex-showroom, Karnataka.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+