ஆடியின் புதிய கிராஸ்ஓவர் கான்செப்ட்... படங்கள், தகவல்கள்
ஆடியின் புதிய கிராஸ்ஓவர் கான்செப்ட்டின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் இந்த புதிய கார் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
All Road Shooting Brake என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய கான்செப்ட்டின் டிசைன் அடுத்த தலைமுறை ஆடி எஸ்யூவி கார்களில் பயன்படுத்தப்படும். இந்த புதிய கான்செப்ட்டின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்
ஆடி டிடி காரிலிருந்து சில டிசைன் தாத்பரியங்களை எடுத்து இந்த கிராஸ்ஓவர் கான்செப்ட்டை உருவாக்கியுள்ளது ஆடி.

எலக்ட்ரிக் கார்
இந்த காரின் பக்கவாட்டில் இ-ட்ரான் பேட்ஜ் கொடுக்கப்பட்டிருப்பதால், இது எலக்ட்ரிக் அல்லது ஹைபிரிட் கார் மாடலாக இருப்பது உறுதியாகியுள்ளது.

வடிவம்
இந்த கார் 13.78 அடி நீளம் கொண்டதாகவும், 19 இஞ்ச் வீல்களும் கொண்டதாக இருக்கிறது. கூரையுடன் இயைந்த ரியர் ஸ்பாய்லர், டியூவல் எக்சாஸ்ட் பைப்புகளையும் படத்தில் காணலாம்.

காக்பிட்
அமெரிக்காவின் CES கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த தலைமுறை ஆடி டிடி காரின் காக்பிட்டும், இந்த புதிய கிராஸ்ஓவர் கான்செப்ட்டின் காக்பிட்டும் அதிக ஒற்றுமைகள் தெரிகின்றன. அதிக வசதிகளை கொண்ட மல்டு பங்ஷன் திரைதான் இந்த கான்செப்ட்டிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்டீயரிங் வீல், ஏர்வென்ட்டுகள் என அனைத்திலும் மிக நேர்த்தியாகவும், பரிசுத்தமான அழகுடன் காட்சி தருகின்றன.


Click it and Unblock the Notifications