10,000 கார்கள் விற்பனை... மகிழ்ச்சியில் ஆஃபர்களை அள்ளி வழங்கும் ஆடி!

By Saravana

இதுவரை ஆஃபர் பற்றி வாய் திறக்காமல் வர்த்தகத்தை ஓட்டி வந்த ஆடி கார் நிறுவனம் முதல்முறையாக அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. அதற்கு காரணம் இல்லாமலா இருக்கும். இந்த ஆண்டில் ஆடி கார் நிறுவனத்தின் விற்பனை முதல்முறையாக 10,000ஐ கடந்துள்ளது. இந்தியாவில் புதிதாக 10,000 புதிய வாடிக்கையாளர்களை பெற்ற மகிழ்ச்சியில் ஆஃபர்களை அறிவித்துள்ளது.

ஆடி ஏ4 மற்றும் ஏ6 செடான் கார்களுக்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர்களை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் உடனடியாக ஆடி ஷோரூமுக்கு செல்ல வேண்டும். ஏனெனில், முதலில் வந்து முன்பதிவு செய்யும் 300 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சிறப்புச் சலுகைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆஃபர் விபரம்

ஆஃபர் விபரம்

ஆடி ஏ4 மற்றும் ஏ6 சொகுசு செடான் கார்களுக்கு முதலில் வந்து முன்பதிவு செய்யும் 300 வாடிக்கையாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கான இன்ஸ்யூரன்ஸ், சாலை அவசர உதவி திட்டம், வாரண்டி மற்றும் சர்வீஸ் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக ஆடி கார் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம், பெரிய அளவில் சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெறுவர்.

ஆடி ஏ4 செடான் கார்

ஆடி ஏ4 செடான் கார்

ஆடி ஏ4 செடான் கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் 13 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. ஆட்டோமமேட்டிக் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

 ஆடி ஏ4 விலை

ஆடி ஏ4 விலை

ரூ.28.30 லட்சம் முதல் ரூ.57,82 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் குறித்த முழுமையானத் தகவல்களை இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

ஆடி ஏ6 சொகுசு கார்

ஆடி ஏ6 சொகுசு கார்

ஆடி ஏ4 காரைவிட கூடுதல் இடவசதி, சிறப்பம்சங்கள் கொண்ட மாடலான ஏ6 கார் 10 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இந்த காரும் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாகஸுடன் விற்பனை செய்யப்படுகிறது.

ஆடி ஏ6 விலை

ஆடி ஏ6 விலை

ரூ.42.63 லட்சம் முதல் ரூ.87.33 லட்சம் வரையிலான விலையில் ஆடி ஏ6 சொகுசு கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரைப் பற்றிய முழுமையானத் தகவல்களை பெற இங்கே கிளிக் செய்யவும்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 27, 2014, 10:45 [IST]
English summary
Audi India has, however, managed to attract 10,000 new customer to their brand in 2014. They will be celebrating this milestone by providing special offers. The German manufacturer will provide offers on their A4 and A6 models.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+