புதிய 4 வீல் டிரைவ் மாடலை உறுதிப்படுத்திய ஆடி... ரொம்ப பெருசா இருக்குமோ?
புதிய 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார் மாடலை வடிவமைத்து வருவதாக ஆடி தெரிவித்துள்ளது. இந்த புதிய மாடல் க்யூ9 என்ற புதிய எஸ்யூவி மாடலாக இருக்கும் என்று யூகத்தகவல்கள் கூறுகின்றன.
பீஜிங் மோட்டார்ஷோவில் ஆடி டிடி ஆஃப்ரோடு கான்செப்ட் மாடலை ஆடி சிஇஓ ரூபர்ட் ஸ்டாட்லர் அறிமுகம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த புதிய 4 வீல் டிரைவ் மாடல் வடிவமைப்பு குறித்த தகவலை உறுதி செய்தார். மேலும், ஏ1 காருக்கு கீழே சிறிய சொகுசு காரை தயாரிக்கும் திட்டம் இல்லை என்றும் கூறினார்.

எதிர்காலத்தில் எஸ்யூவி மாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் ஆடி திட்டமிட்டுள்ளது. 2020ம் ஆண்டில் மொத்த விற்பனையில் 45 சதவீதம் எஸ்யூவி மாடல்களின் பங்களிப்பாக இருக்கும் என்பது ஆடியின் கணக்கு.
தற்போது வடிவமைக்கப்பட்டு வருவதாக கருதப்படும் க்யூ9 எஸ்யூவி ஓர் முழுமையான சூப்பர் எஸ்யூவி ரக மாடலாக வெளியிட ஆடி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. லம்போர்கினி உரஸ், பென்ட்லீ எஸ்யூவி மாடல்களுக்கு இணையான அம்சங்களை கொண்டிருக்கும்.
இந்த புதிய 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலின் எஞ்சின் விபரங்கள் இதுவரை தெரியவில்லை. ஆனால், இது ஹைபிரிட் எரிபொருள் தொழில்நுட்பம் கொண்டதாகவும், வி6 அல்லது வி8 எஞ்சினுடன் வரும் என்று கணிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








