சஸ்பென்ஷனிலிருந்து காருக்கு சுய மின்சாரம்... இது ஆடியின் அடுத்த புதுமை!
சஸ்பென்ஷனிலிருந்து காருக்கு தேவையான மின்சாரத்தை பெறும் வகையில் புதிய சஸ்பென்ஷன் அமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் ஆடி தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்தால், ஹைபிரிட் கார்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
ஆட்டோ எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை ஆடி கார் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் தலைவர் டாக்டர் உல்ரிச் ஹாக்கென்பெர்க் தெரிவித்திருக்கிறார்.

ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம்
ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் தொழில்நுட்பத்திலிருந்து பிரேக் பிடிக்கும்போது விரயமாகும் இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி சேமிப்பது போன்றே இந்த புதிய ஜெனரேட்டர் சஸ்பென்ஷன் இயங்கும்போது மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் இதனை உருவாக்கி வருகின்றனர்.

ஜெனரேட்டர்
சாதாரண சஸ்பென்ஷன் அமைப்பை மாற்றி, அதனை ஜெனரேட்டர் கொண்டதாக புதிய சஸ்பென்ஷன் அமைப்பை உருவாக்கி வருகின்றனர். மேடு, பள்ளங்களில் காரின் சஸ்பென்ஷன் டேம்பர்கள் மேலும், கீழும் அசையும்போது டேம்பருக்குள் பொருத்தப்பட்டிருக்கும் ஜெனரேட்டர் சுழன்று மின் ஆற்றலை உற்பத்தி செய்து பேட்டரியில் சேமிக்கும். ஆனால் முழுமையான தொழில்நுட்ப விபரங்கள் வெளியிடப்படவில்லை.

ஹைபிரிட் கார்
ஹைபிரிட் கார்களுக்கு தேவையான மின்சாரத்தை சஸ்பென்ஷன் மூலம் பெறும் வாய்ப்பு கிடைக்கும். இதுதவிர, காரில் இருக்கும் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கும் இந்த மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பாடி ரோல் தடுக்கப்படும்
பெர்ஃபார்மென்ஸ் கார்களிலும் இந்த ஜெனரேட்டர் சஸ்பென்ஷன் அமைப்பை பொருத்த முடிவு செய்துள்ளதாகவும் உல்ரிச் சூசகமாக தெரிவித்தார். அதாவது, அதிவேகத்தில் வளைவுகளில் திரும்பும்போது கார்கள் கவிழ்ந்து விடாமல் இருக்க சஸ்பென்ஷனிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மீண்டும் இன்டிபென்டன்ட் டேம்பருக்கு மின்சாரத்தை அளித்து பாடி ரோலை தவிர்க்கும் நுட்பத்தையும் கொடுக்க ஆடி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

விபரம் இல்லை
இந்த தொழில்நுட்பம் இயக்கத்தின் முழுமையான தகவல்களை உல்ரிச் வெளியிடவில்லை. இந்த தொழில்நுட்பம் குறித்து மேலோட்டமாக மட்டுமே தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








