ஒரே ஆண்டில் 10,000 கார்களுக்கு மேல் விற்ற முதல் சொகுசு கார் நிறுவனம் ஆடி!
இந்தியாவில், ஓர் ஆண்டில் 10,000 கார்களுக்கும் மேல் விற்பனை செய்த முதல் சொகுசு கார் நிறுவனம் என்ற பெருமையை ஆடி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு 10,002 கார்களை விற்பனை செய்துள்ளதாக ஆடி தெரிவித்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 11 சதவீதம் கூடுதலாகும்.

கடந்த 2009ம் ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி பிஎம்டபிள்யூ நிறுவனம் முதல் இடத்தை பிடித்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பிஎம்டபிள்யூ மற்றும் பென்ஸ் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி ஆடி முதலிடத்தை பிடித்துள்ளது.
இதேபோன்று, கடந்த ஆண்டு 9,003 கார்களை விற்பனை செய்துள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டைவிட 2013ல் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை 31.62 சதவீதம் அதிகரித்துள்ளது. பிஎம்டபிள்யூ தனது கார் விற்பனை விபரங்களை வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications








