ஆடி கார்களுக்கு ரூ.8 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி- விபரம்!

By Saravana

ஆடி சொகுசு கார்களுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஸ்பிரிங் கலெக்ஷன்' என்ற பெயரில் இந்த தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் கார்கள் மீதான உற்பத்தி வரி குறைக்கப்பட்டதை, அப்படியே தள்ளுபடி சலுகையாக ஆடி அறிவித்திருக்கிறது. ஆடியின் ஏ4, ஏ6 செடான் கார்களுக்கும், க்யூ5 மற்றும் க்யூ7 எஸ்யூவி கார்களுக்கு இந்த தள்ளுபடி சலுகை பொருந்தும்.

ஆடி ஏ4 கார்

ஆடி ஏ4 கார்

ரூ.32.81 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆடி ஏ4 கார் தற்போது ஸ்பிரிங் கலெக்ஷன் திட்டத்தின் மூலம் ரூ.28.30 லட்சம் விலையில் கிடைக்கிறது. ரூ.4.5 லட்சம் வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது.

ஆடி ஏ6 கார்

ஆடி ஏ6 கார்

ரூ.43.31 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆடி ஏ6 கார் தற்போது ரூ.36.07 லட்சம் விலையில் கிடைக்கிறது. இந்த காருக்கு அதிகபட்சமாக ரூ.7.24 லட்சம் வரை சேமிக்க முடியும்.

ஆடி க்யூ 5 எஸ்யூவி

ஆடி க்யூ 5 எஸ்யூவி

ரூ.45.72 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆடி க்யூ5 பிரிமியம் எஸ்யூவியை தற்போது ரூ.37.22 லட்சம் என்ற தள்ளுபடி விலையில் முன்பதிவு செய்து ரூ.8.5 லட்சம் வரை சேமிப்பை பெற முடியும்.

ஆடி க்யூ 7 எஸ்யூவி

ஆடி க்யூ 7 எஸ்யூவி

ரூ.63.86 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆடி க்யூ7 பிரிமியம் எஸ்யூவியை ரூ.56.47 லட்சம் என்ற விலையில் தற்போது முன்பதிவு செய்து கொள்ளலாம். ரூ.7.39 லட்சம் வரை சேமிக்க முடியும். கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள ஆடி டீலர்களை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 முந்துங்கள்

முந்துங்கள்

இந்த தள்ளுபடி திட்டத்தின் மூலம் மொத்தமாக 275 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. எனவே, முதலில் வருவோர்க்கும் முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த தள்ளுபடி திட்டத்தில் கார்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் மாடல்வாரியாக விலை குறைப்பு விபரத்தை காணலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, March 7, 2014, 12:09 [IST]
English summary
German luxury carmaker Audi India has announced a 'Spring Collection' offer for a limited period. The Audi Spring Collection will have 275 A4 and A6 luxury sedans and Q5 and Q7 SUVs on offer with special discounts.
மேலும்... #audi #a4 #q5 #four wheeler #ஆடி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+