சேற்றில் விளையாடி மகிழ்ந்த ஆடி கார்கள்!
By Saravana
ஆடி க்யூ டிரைவ் என்ற பெயரில் ஆஃப் ரோடு நிகழ்ச்சிகளை கடந்த 3 ஆண்டுகளாக ஆடி நிறுவனம் நடத்தி வருகிறது. கடந்த வாரம் நாடு முழுவதும் உள்ள 30 நகரங்களில் ஆடி க்யூ டிரைவ் நிகழ்ச்சி நடந்தது.
ஆடியின் க்யூ3, க்யூ5 மற்றும் க்யூ7 ஆகிய எஸ்யூவி மாடல்களில் இருக்கும் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆஃப் ரோடு செல்லும்போது எந்தளவிற்கு சிறப்பாக செயல்படுகிறது என்பதை நேரடியாக அனுபவித்து தெரிந்து கொள்ளும் விதத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
கடந்த வார இறுதியில் பெங்களூரில் நடந்த ஆடி க்யூ டிரைவ் நிகழ்ச்சியில் டிரைவ்ஸ்பார்க் டீம் பங்கேற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பான அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
ஆர்வம்
ஆர்வம்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பத்திரிக்கையாளர்கள், வாடிக்கையாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் குழுமியிருந்தனர்.
ஆடி கார்கள்
ஆடி கார்கள்
இந்த நிகழ்ச்சிக்காக ஒரு க்யூ3 எஸ்யூவி, இரண்டு க்யூ5 எஸ்யூவிகள் மற்றும் ஒரு க்யூ7 எஸ்யூவிகள் பயன்படுத்தப்பட்டன.
ஆஃப் ரோடு டிராக்
ஆஃப் ரோடு டிராக்
ஓட்டுபவர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தும் விதத்தில் 500 மீட்டர் நீளத்துக்கு ஆஃப் ரோடு டிராக் அமைக்கப்பட்டிருந்தது.
தடைகள்
தடைகள்
மேடு பள்ளங்கள் நிறைந்த சாலை, செங்குத்தான சாலை, தடுப்புகள், சேறு சகதி நிறைந்த சாலை என ஆஃப் ரோடு டிராக் பல்வேறு தடைகள் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது.
ஹில்ஹோல்டு வசதி
ஹில்ஹோல்டு வசதி
செங்குத்தாக ஏறி இறங்கும் சாலையில் ஹில் ஹோல்டு, ஹில் டிசென்ட் கன்ட்ரோல் ஆகிய வசதிகளின் பயனை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
க்யூ5 அனுபவம்
க்யூ5 அனுபவம்
எமது டீமிற்கு கருப்பு நிற ஆடி க்யூ5 கார் வழங்கப்பட்டது. இந்த காரில் 174 எச்பி ஆற்றலை அளிக்கும் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
சேற்றை கண்டு அசரவில்லை
சேற்றை கண்டு அசரவில்லை
இந்த ஆஃப் ரோடு டிராக்கில் அனைத்து தடைகளையும் எளிதாக கடக்க முடிந்தது. ஆனால், இந்த சேறு சகதியை கடப்பது பலருக்கு சவாலாக இருந்தது.
திணறிய க்யூ7
திணறிய க்யூ7
இந்த சேற்றில் அதிக சக்தி கொண்ட க்யூ7 கார் சிக்கிக் கொண்டது. ஓட்டியவரின் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வெளியேற முடிந்தது.
மாற்றங்கள் இல்லை
மாற்றங்கள் இல்லை
க்யூ3 மற்றும் க்யூ5 எஸ்யூவிகளை விட க்யூ7 காரில் ஒரு கூடுதல் சிறப்பம்சம் இருந்தது. அந்த காரில் மட்டும் ஆஃப் ரோடு டயர்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதேவேளை, அங்கு கொடுக்கப்பட்ட 4 ஆடி எஸ்யூவி மாடல்களிலும் ஆஃப் ரோடு பயன்பாட்டிற்காக எந்தவொரு மாறுதல்களும் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆஃப் ரோடு மாடலா?
ஆஃப் ரோடு மாடலா?
இதுபோன்ற சிறிய அளவிலான ஆஃப் ரோடு சாகசங்களுக்கு இந்த மாடல்கள் ஓகே.
மாறுதல்கள் வேண்டும்
மாறுதல்கள் வேண்டும்
இன்னும் கரடு முரடான சாலைகளில் அல்லது இடங்களில் ஆஃப் ரோடு செய்ய விரும்புவர்கள் சில மாற்றங்களை செய்தாக வேண்டும். அதில், டயர்களும் முக்கியமானது.
ஆடி க்யூ 3 எஞ்சின்
ஆடி க்யூ 3 எஞ்சின்
ஆடி க்யூ3 எஸ்யூவியில் 175 பிஎச்பி ஆற்றலையும், 380 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1,968சிசி 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 7 ஸ்பீடு எஸ் டிரோனிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டது.
ஆடி க்யூ5 எஞ்சின்
ஆடி க்யூ5 எஞ்சின்
ஆடி க்யூ5 எஸ்யூவியிலும் க்யூ3 எஸ்யூவியில் இருக்கும் அதே டீசல் எஞ்சின்தான். பவர் வெளிப்படுத்தும் திறன் கூட ஒன்றுதான்.
ஆடி க்யூ7 எஞ்சின்
ஆடி க்யூ7 எஞ்சின்
ஆடி க்யூ7 எஸ்யூவியில் 243 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2,967சிசி கொண்ட வி6 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு டிரிப்ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைந்து செயலாற்றுகிறது.
காணத்தவறாதீர்: இன்றைய ஃபேஸ்புக் வீடியோ இதோ உங்களுக்காக!!
Post by DriveSpark Tamil.
More from DriveSpark
Article Published On: Friday, April 4, 2014, 8:55 [IST]
English summary
மேலும்... #audi #four wheeler #ஆடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+