லேசர் ஹெட்லைட்டுகளுடன் வரும் புதிய ஆடி ஸ்போர்ட்ஸ் கார்!

By Saravana

லேசர் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்ட புதிய ஆடி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லேசர் ஹெட்லைட்டுகளுடன் புதிய பிஎம்டபிள்யூ ஐ8 காரின் டெலிவிரி விரைவில் துவங்கப்பட உள்ள நிலையில், ஆடி கார் நிறுவனமும் லேசர் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்ட காரை அறிமுகம் செய்துள்ளது.

வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு கண்காட்சியில் லேசர் ஹெட்லைட்டுகள் கொண்ட புதிய ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முதலில் இங்கிலாந்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் இந்த புதிய கார் லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட உள்ளது. மொத்தம் 99 கார்கள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படும். ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ் என்ற பெயரில் வரும் இந்த லிமிடேட் எடிசன் மாடலில் இடம்பெற்றிருக்கும் லேசர் ஹெட்லைட் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.


 வேகத்துக்கு தக்கவாறு...

வேகத்துக்கு தக்கவாறு...

60 கிமீ வேகத்தை கார் தாண்டும்போது லேசர் ஹெட்லைட்டுகளின் பிரகாசமும், ஒளியை பாய்ச்சும் தூரமும் அதிகரிக்கும். எல்இடி ஹெட்லைட்டுகளும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

 கண்கூச்சம் இருக்காது

கண்கூச்சம் இருக்காது

எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்த ஹெட்லைட்டுகளிலிருந்து வெளிவரும் ஒளி அதிக கண் கூச்சம் தராது என்பது இதன் மற்றொரு கூடுதல் அம்சம். இது எல்இடி ஹெட்லைட்டுகளைவிட இரட்டிப்பு ஒளி வெள்ளத்தை வழங்கும்.

லேசர் சிஸ்டம்

லேசர் சிஸ்டம்

ஒரு ஹெட்லைட்டுக்கு தலா 4 அதிசக்திவாய்ந்த லேசர் டயோடுகளை கொண்டிருக்கும். அதிலிருந்து வரும் நீல நிற லேசர் ஒளிக்கற்றைகளை பாஸ்பர் கன்வெர்ட்டர் சாதனம் வெண்மை நிற ஒளியாக மாற்றி சாலையில் பீய்ச்சியடிக்கும். 5,500 கெல்வின் வெண்மை நிற ஒளியை இந்த லேசர் ஹெட்லைட்டுகள் வழங்கும் திறன் கொண்டது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த ஸ்போர்ட்ஸ் காரில் 570 எச்பி பவரையும், 540 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும் திறன் கொண்ட 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த ஆடி கார் 0- 100 கிமீ வேகத்தை இந்த கார் 3.4 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 320 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. கார்பன் ஃபைபர் போன்ற இலகு ரக பாகங்களால் கட்டமைக்கப்பட்ட இந்த கார் லிட்டருக்கு 7.74 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

இங்கிலாந்தில் செப்டம்பர் - நவம்பர் மாதங்களுக்கு இடையில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய ஆடி ஸ்போர்ட்ஸ் கார் 1,60,025 பவுண்ட் விலையில், அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.60 கோடி விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, May 12, 2014, 11:37 [IST]
English summary
Audi has unveiled their most powerful R8 road legal car till date. They call it the LMX variant of the R8, it is a limited edition and will have a very special feature. The limited edition R8 will come with laser lights as standard fitment.
மேலும்... #audi #r8 #four wheeler #ஆடி #ஆர்8
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+