6ந் தேதி ரூ.1.5 கோடி விலையில் ரிலீசாகும் புதிய ஆடி கார்
வரும் 6ந் தேதி, திங்கட்கிழமையன்று ஸ்போர்ட்ஸ் சலூன் ரகத்தை சேர்ந்த புதிய ஆர்எஸ்7 காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது ஆடி கார் நிறுவனம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது பெர்ஃபார்மென்ஸ் ரகத்தை சேர்ந்த ஏஎம்ஜி கார் மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருவதையடுத்து, இந்த புதிய பெர்ஃபார்மென்ஸ் மாடலை ஆடி அறிமுகம் செய்கிறது.

இந்த புதிய கார் ஆடி ஏ7 செடான் காரின் பெர்ஃபார்மென்ஸ் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இது மெர்சிடிஸ் பென்ஸ் இ63 ஏஎம்ஜி மற்றும் பிஎம்டபிள்யூ எம்5 கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
இதில் இருப்பது 560 பிஎஸ் பவரையும், 700 என்எம் டார்க்கையும் அளிக்கும் 4.0 லிட்டர் வி8 டர்போ எஞ்சின். இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் கடந்துவிடும். இந்த காரின் உச்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆகும்.
ஆடியின் பிரத்யேக குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த கார் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது. மேலும், இந்த காரின் எஞ்சினில் இருக்கும் 8 சிலிண்டர்களில் 4 சிலிண்டர்கள் தேவைக்கேற்ப செயல்படும் விதத்திலான சிலிண்டர் ஆன் டிமான்ட் தொழில்நுட்பமும் உள்ளது. இதன்மூலம், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.
ரூ.1.5 கோடி விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








