எலக்ட்ரிக் டர்போசார்ஜருடன் ஆடியின் புதிய கான்செப்ட் கார் அறிமுகம்

எஞ்சின் ஆற்றலை வைத்து இயங்கும் விதத்தில் இதுவரை டர்போசார்ஜர்கள் தொழில்நுட்பம் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த வழக்கமான தொழில்நுட்ப முறையை மாற்றும் விதத்தில் தனியாக மின்சாரத்தில் இயங்கும் கார் எஞ்சினுக்கான புதிய டர்போசார்ஜரை ஆடி தயாரித்துள்ளது.

இந்த எலக்ட்ரிக் டர்போசார்ஜர் கொண்ட டிடிஐ டீசல் எஞ்சின் ஏற்கனவே லீ மான்ஸ் ரேஸில் பயன்படுத்தப்பட்ட மூன்று ஆடி இ-ட்ரோன் கார்களிலும் இடம்பெற்றுவிட்டன. இந்த நிலையில், டீசல் மாடலில் வரும் ஆடி ஆர்எஸ்5 கான்செப்ட் மாடலிலும் இதே எலக்ட்ரிக் டர்போசார்ஜர் துணையுடன் இயங்கும் டிடிஐ எஞ்சின் இடம்பெறுகிறது.


டர்போ லேக் பிரச்னை

டர்போ லேக் பிரச்னை

இந்த புதிய எலக்ட்ரிக் டர்போசார்ஜர் எஞ்சின் குறித்த தகவல்களை ஆடி வெளியிட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் டர்போசார்ஜர் கொண்ட எஞ்சின் வியக்க வைக்கும் பெர்ஃபார்மென்ஸை வழங்கும் என்பதோடு, டர்போ லேக் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால், சிறப்பான பெர்ஃபார்மென்ஸை உணர முடியும்.

 பெர்ஃபார்மென்ஸ் அதிகம்

பெர்ஃபார்மென்ஸ் அதிகம்

எஞ்சின் ஆற்றலின் துணையுடன் சாதாரண டர்போசார்ஜர்களைவிட இந்த மின்சார டர்போசார்ஜரில் உள்ள கம்பரஷர் மிக அதிக அழுத்தத்தில் காற்றை எஞ்சினுக்குள் செலுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். இந்த எலக்ட்ரிக் டர்போசார்ஜர் இயக்கத்திற்காக லித்தியம் அயான் பேட்டரி ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

ஆடி ஆர்எஸ்5 கான்செப்ட் காரில் இருக்கும் வி6 பை- டர்போ எஞ்சின் 1,250ஆர்பிஎம் முதல் 2,000 ஆர்பிஎம்.,மில் 385 பிஎஸ் பவரையும், 750 என்எம் டார்க்கையும் வழங்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். 0- 100 கிமீ வேகத்தை வெறும் 4 வினாடிகளிலும், 0- 200 கிமீ வேகத்தை 16 வினாடிகளிலும் கடந்துவிடும்.

சிறப்பான மைலேஜ்

சிறப்பான மைலேஜ்

இது பெர்ஃபார்மென்ஸ் காராக இருப்பதோடு, எரிபொருள் சிக்கனத்திலும் மிகச்சிறப்பாக இருக்கும் என்கின்றனர். 100 கிமீ தொலைவுக்கு 5.3 லிட்டர் மட்டுமே எரிபொருளை கிரகிக்கும்.

க்யூ-7 எஸ்யூவியிலும்...

க்யூ-7 எஸ்யூவியிலும்...

இதே எலக்ட்ரிக் டர்போசார்ஜர் துணையுடன் இயங்கும் டீசல் எஞ்சின் ஆடியின் புதிய க்யூ7 பிரிமியம் எஸ்யூவியிலும் இடம்பிடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் ஆடி பிரியர்கள் மத்தியில் பெரும் ஆவல் எழுந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, June 20, 2014, 16:34 [IST]
English summary
Premium automaker Audi is celebrating 25 years of their TDI engines, and has revealed details of a new Audi RS 5 TDI concept that features a twin-turbo V6 diesel engine with a new electric turbocharger, similar to what debuted in the R18 e-Tron Audi LMP1 Le Mans racer.
மேலும்... #audi #four wheeler #ஆடி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+